Monday, November 30, 2009

இந்தியாவில் சில நாட்கள்..




நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் சில தினங்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வழக்கம் போல் பல நிபந்தனைகளுடன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும், இருபது முப்பது பேர்களை இன்டர்வியூ செய்து இரண்டு அல்லது மூன்று பேர்களை எங்கள் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும், ஏதேனும் பிரச்சினை என்றால் எந்த நேரமும் லாகின் செய்ய வேண்டும் போன்று பல விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் வர முடிந்தது.

ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வாங்கலாமென்று இருக்கிறேன். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால் அதன் பெர்ஃபார்மன்ஸ், பேக்கேஜ்கள் பற்றி தெரிவியுங்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு திருமணங்கள், உறவினர் வீடுகள் என்று இங்குமங்கும் அலைய வேண்டியுள்ளதால் அதுவரை, அவ்வப்போது நண்பர் உடுமலை டாட் காம் சிதம்பரம் அவர்களின் புத்தகக் கடையில் இருந்தபடி இணையத் தொடர்பிலிருக்க முயற்சிக்கிறேன்.

பதிவர்களையும், வாசகர்களையும்(???) சந்திக்க மிகவும் ஆவலாயிருப்பதால், வந்ததும் நேற்று முதல் வேலையாக ஒரு ஏர்செல் அலைபேசி எண்ணை எடுத்து விட்டேன் (+91)-9715106693.  முடிந்தால் அழையுங்கள்.


சென்னையில் பதிவர்கள் சிலரை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தேன், நண்பர் ஜோ, கார்த்திகேயன் மற்றும் ஷண்முகப்ரியன் ஐயா ஆகியோர் மட்டுமே சம்மதித்திருக்கின்றனர். நண்பர் ப்ரபாகர் பல பிரபல பதிவர்களையும் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருவதாக வாக்களித்துள்ளதால் அவர்களையும் சந்திப்பதில் ஏதும் பிரச்சினை இருக்காது என்று எண்ணுகிறேன்.

கோவை, பொள்ளாச்சி, உடுமலை என்று வந்த வழியெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது - மீண்டும் தொழில்கள களைகட்டி விட்டனவா என்று கேட்டால், முகூர்த்த நாள் என்றனர். தோட்டங்களில் வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினமும் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும் நூறு ரூபாய் சம்பளமாம் எனவே யாரும் எட்டு மணி நேரம் காட்டில் வெயிலில் வேலை செய்யத் தயாராய் இல்லை. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் பலவும் உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை வரை வந்து ஆட்களை பஸ்களில் ஏற்றிச் சென்று Pick and Drop கொடுக்கிறார்களாம்.

இளைஞர்கள் கைகளிலெல்லாம் சைனா மொபைல் போன்கள், ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் இலவச திட்டங்கள் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே தெரிகிறது. எனவே நண்பர்களே, நீங்களும் மகிழ்ச்சியாக இருந்தால் என்னை அழைக்கும் முன்னர் எதற்கும் ஒரு முறை யோசியுங்கள் :)

18 comments:

  1. //இளைஞர்கள் கைகளிலெல்லாம் சைனா மொபைல் போன்கள், ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் இலவச திட்டங்கள் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே தெரிகிறது.//

    கண்டுபிடிச்சிட்டீங்களே(!!!!??????) ....வருக...வருக....

    ReplyDelete
  2. வாங்க நாகா!:)

    /சைனா மொபைல் போன்கள்,/

    அதுக்குதான் இன்னைக்கு ராத்திரி 12 மணியோட மணியடிச்சிடுவாங்களே. நாளையில இருந்து எஃப்.எம்.மெமொரி கார்ட்ல இருக்கிற பாட்டு கேக்கலாம்.

    ReplyDelete
  3. அட... ஊர்லதானா... 10தேதிக்கு மேல உடுமலை வர உத்தேசம்... சந்திப்போம்.

    ReplyDelete
  4. //வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும்,//

    ஆஹா எனக்கும் ஒரு வேலை இருந்தா சொல்லுங்க..:))

    ReplyDelete
  5. Hi,
    When i was India (Coimbatore), i purchased Reliance Broadband +. It worked very well as expected. I was able to connect to our servers after connecting with VPN Client. The initial price i paid is Rs.3500 (Approx). But the recurring monthly amount is Rs.800 (for this 3GB is free). But select this option if you use more otherwise just select the basic one. If you have any questions email me. One more important thing is this RIL BB + is works with good speed only prime cities. I dont know how it works in udumali. ( Can someone tell me how to type here in Tamil, i love to write in tamil but i dont know how to type), Thanks

    ReplyDelete
  6. Reliance Broadband நல்லாவே இருக்கு. முதல் ஒரு மாதத்துக்கு Prepaidல் 10GB free இருக்கு. விலை 3500/- வேண்டும் என்றால் பின்னாடி Postpaid மாத்திக்கலாம்

    ReplyDelete
  7. மகிழ்ச்சி...

    முடிந்தால் ஈரோடு வர முயற்சிக்கவும்

    ReplyDelete
  8. வாங்க பாலாஜி, வானம்பாடிகள் ஐயா..! மகேஷ் இருபதாம் தேதி வரை இங்குதான் இருப்பேன். நிச்சயம் சந்திப்போம்..

    ReplyDelete
  9. சிவா, பாலாஜி, ரெண்டு பேரும் உங்களோட மொபைல் நம்பர குடுங்க அல்லது ஈமெயில் பண்ணுங்க - ktnagu@gmail.com அல்லது என்னய கூப்புடுங்க. உங்களோட ப்ரொஃபைல பாக்க முடியல..

    ReplyDelete
  10. நிச்சயம் முயற்சிக்கிறேன் கதிர்..

    ReplyDelete
  11. சென்னையில் சந்திக்கலாம்..93400 89989

    ReplyDelete
  12. வாங்க நண்பர் நாகா ,
    சந்திப்ப்போம்,இன்னும் ஊர் திரும்ப 10 நாளே உள்ளது, 80% நண்பர்களைக்கூட சந்திக்கவில்லை, ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிவிடுகிறது, எவ்வளவு விடுப்பு தந்தாளும் போதமாட்டேன் என்கிறது.

    ReplyDelete
  13. விடுமுறை இனிமையாய் கழிய வாழ்த்துக்கள் நாகா.. கோபியும் தற்சமயம் சென்னையில்தான் இருக்கிறார்.

    ReplyDelete
  14. வாங்க நாகா, எப்படியிருக்கீங்க?
    ஊருல எல்லாரும் சௌக்கியமா?

    12-12-2009 அன்று சென்னையில் சந்திப்போம்.

    Shiva,
    You may use google.co.in/transliterate/indic/tamil to type in tamil.

    ReplyDelete
  15. நாகா,
    அருமையாக கவனித்திருக்கிறீர்கள். விவசாயத்துக்குப் பெயர் போன ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஆட்களே கிடைப்பதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி, கையெழுத்துப் போட்டால் நூறு ரூபாய், ஒரு ரூபாய் அரிசி, இலவச மின் விளக்கு, தொலைக்காட்சிப் பெட்டி,.....இருக்கும்போது, வேலை செய்ய ஆள் கிடைப்பது மிக்க சிரமம். இலவசங்களால் விவசாயத்தைக் கொன்று விட்டு, அரிசியை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். வெட்கம்....சிவகிரி பிரபு.

    ReplyDelete
  16. கருத்துக்களுக்கு நன்றி சிவகிரி நண்பரே..!

    ReplyDelete
  17. ஆகா...இங்க சிக்கியாச்சா. உங்க நம்பரைக் கொடுக்குறதுக்கு முன்னால நீங்க ஒரு தடவை யோசிச்சீங்கிளா... இல்ல... நாடு ராத்திரியில நீங்க வெறும் தாசா....இல்ல,,,, இந்த மாதிரி கேள்வி வரக்கூடாதுன்னு ஒரு அக்கறைதான்.

    ReplyDelete
  18. எங்க பார்த்தாலும் விவசாயத்துக்கு ஆள் கிடைக்க வழி இல்லாம பண்ணிட்டாங்க. தினமணி தலையங்கம் சொன்ன மாதிரி பன்னாட்டு நிறுவனமும் அந்த ஊழியர்களும் மட்டும்தான் நம்ம நாட்டுல வாழ முடியும் போலிருக்கு.

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...