திரு.'இராகவன் நைஜீரியா' - அமீரகப் பதிவர்கள்

on Monday, June 22, 2009


பின்னூட்டக் கொள்ளுப்பட்டாசு வைக்கவே நடுநடுங்கிய வலை வாசகர்களின் மத்தியில் ஏவுகணைகளையே எளிதாக எறிந்தவர், பதிவுலகின் பனைமரங்கள் முதல் இன்று முளைத்த என் போன்ற காளான்கள் வரை அனைவரின் அன்பை மட்டுமே சம்பாதித்தவர், 'ஆசானே' என்று வயதில் இளைய பதிவர்களையும் உயர்வாய் விளிக்கும் பண்பாளர், தமிழ் வலைப்பூச் செடிகளின் பின்னூட்ட உரம், உலகெங்குமுள்ள முகமறியா பதிவுச் சகோதர சகோதரிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நைஜீரியப் பாசப்புயல், சென்னையைத் தாக்கச்செல்லும் வழியில் நேற்று முன்தினம் அமீரகத்தில் சற்று இளைப்பாறியது. புயலின் பேச்சிலும் அன்பிலும் கட்டுண்டிருந்த அமீரகப் பதிவர்களின் சில மணித்துளிகள் இங்கே.


அலுவல் முடிந்து, அவர் மையம் கொண்டிருந்த 'Pearl Residence' 107ம் எண் அறையில் நுழைந்ததுமே எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இராகவன் நைஜீரியா என்ற அவர் பெயர், பதிவு மற்றும் பின்னூட்டங்களை வைத்து சாருஹாசன் போன்ற ஒரு 50 வயது உருவத்தை கற்பனை செய்திருந்த எங்களுக்கு, 'பதினாறு வயதினிலே' டாக்டர் போன்று அட்டகாசமாய் காட்சியளித்தார் எங்கள் ஆசான். உடனே 'இவர் புகைப்படத்தை, Profileல் போட்டாலே ஓராயிரம் என்ன, ஒரு லட்சம் Followers உறுதி' என்று எல்லோர் மனத்திலும் ஒரே மாதிரியான எண்ணம் ஓடியது.

கண்ணா, நான், அபு அஃப்ஸர், கலையரசன்

"எப்படி சார் இவ்வளோ இளமையா இருக்கீங்க" என்று எப்போதோ புறமுதுகிட்டு வாங்கிய பூரிக்கட்டையின் அடியால் இன்னனும் வலித்துக் கொண்டிருந்த முதுகை தடவியபடியே கேட்டார் குசும்பன். "எவ்வளோ கஷ்டம் வந்தாலும் வாழ்கையை சந்தோஷமா அனுபவிப்பேன்" என்று கண்ணாவின் இளந்தொந்தியைப் பார்த்து சிரித்தபடியே பதிலளித்தார் ஆசான்.


ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே, பதிவுகளின் காப்புரிமை பற்றி ஆரம்பித்த விவாதம் பல்வேறு கோணங்களில் ஒரு பதிவர் சந்திப்பைப் போன்றே தொடர்ந்தது. இடையிடையே அண்ணியாரின் விருந்தோம்பலில் நனைந்தபடி திரு. ஆசாத் மற்றும் திரு. சுந்தரராமனின் அனுபவப் பகிர்வுகள், கலையரசன், குசும்பனின் கலாட்டாக்களுமாய் நகர்ந்த சந்திப்பு, செல்பேசி மூலம் தங்கமணிகள் விட்ட அலாரத்தால் இறுதிக் கட்டத்தை எட்டியது.

குசும்பன், கண்ணா, ப்ரதீப்

கடந்த பதிவர் சந்திப்பில் வடை மட்டுமே கொண்டுவந்த திரு. சுந்தரராமன், இந்த முறை புயலின் வருகையை ஒட்டி, வடையுடன் இட்லியையும் வரவழைத்திருந்தார். அபு அஃப்ஸரும் ப்ரதீப்பும் அனைவருக்கும் பரிமாறிய அந்தச் சிற்றுண்டியுனூடே, துபாயில் திரு. ஆசாத் அவர்கள் தலைமையில் துவங்கப்போகும் ஆயிரமாவது வலைத்தமிழ் சங்கத்திற்கு நம் விழா நாயகன் நன்கொடையளித்து கௌரவ ஆலோசகராகவும் இருக்க ஒப்புக்கொண்டதுடன் ஒரு இனிய மாலை நிறைவுக்கு வந்தது.

கலையரசன், திரு. இராகவன், திரு. சுந்தரராமன்

சற்று முன் கிடைத்த செய்தி :- ஞாயிறு நள்ளிரவு வாக்கில் அமீரகக் கரையைப் பாதுகாப்பாக கடந்த புயல், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் மையம் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

43 comments:

வினோத்கெளதம் said...

Super..
Naan thaan Miss paniten..

கண்ணா.. said...

அழகாய விவரித்து விட்டீர்கள் நாகா..

அரவிந்த்தின் பேச்சும் சகஜமாகவும் மிகவும் ப்ரெண்ட்லியாகவும் இருந்தது..

ராகவன் அண்ணனின் குடும்பத்தாரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி..

அவர்கள் அனைவரும் நெடுநாள் பழகியவர்களை போல் உரையாடியது பெருமகிழ்ச்சியை அளித்தது..

கண்ணா.. said...
This comment has been removed by the author.
கண்ணா.. said...

இந்த சந்திப்பிலும் வடை கொண்டு வந்ததால் ”வடையேழு வள்ளல்கள்”வரிசையில் நம்ம சுந்தர் அண்ணனையும் சேர்த்து விடலாம்.

கலையரசன் said...

எளிமையா, சுருக்கமா எழுதிட்டியே செல்லேலலலாம்ம்!

கண்ணா சொன்ன மாதிரி.. அவர்கள் எல்லாருமே ரொம்பநாள் பழக்கம் போல பேசினது, எனக்கு ஆஆஆஆச்சரியமா இருந்தது!!

குசும்பன் said...

//'இவர் புகைப்படத்தை, Profileல் போட்டாலே ஓராயிரம் என்ன, ஒரு லட்சம் Followers உறுதி' என்று எல்லோர் மனத்திலும் ஒரே மாதிரியான எண்ணம் ஓடியது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாவம் வயசானவர் இதை எல்லாம் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை!

கலையரசன் said...

ஆமா? முக்கியமான விஷயத்தை விட்டுட்டியே கண்னு...
குசும்பன் பாஸூக்கு இடுப்பு புடிச்சத பத்தி எழுதவே இல்ல?
(எவன்டா அவன் இடுப்பா அது தஞ்சாவூர் அடுப்புன்னு கத்தறது?)

அப்புறம் விநோத் இல்லாதது, மொக்கபோட ஆள் இல்லாம போச்சின்னு எழுதியிருக்கலாம்!

நாகா said...

//Super..
Naan thaan Miss paniten..//

நாங்களும்தான் உங்க மொக்கையை மிஸ் பண்ணிட்டோம் :)

நாகா said...

நன்றி கண்ணா.. ஆம் இந்த வலைப்பூவினால்தான் எத்தனை உறவினர்கள்

நாகா said...

//ஆமா? முக்கியமான விஷயத்தை விட்டுட்டியே கண்னு...
குசும்பன் பாஸூக்கு இடுப்பு புடிச்சத பத்தி எழுதவே இல்ல?
(எவன்டா அவன் இடுப்பா அது தஞ்சாவூர் அடுப்புன்னு கத்தறது?)//

யோவ்.. அதான் பூரிக்கட்டய பத்தி எழுதி இருக்கோம்ல..

அது ஒரு கனாக் காலம் said...

இப்ப தான் பாத்தேன் பதிவை ... நான்லாம் பதினாறு வயதினிலே பாக்கும் பொது எங்களுக்கு வயசு பதினாறு... அனால் நீங்கலாம் யூத்து ..எப்படி அந்த டாக்டர் எல்லாம் ஞாபகம் வைத்து சும்மா நச்சுன்னு அடிக்கிறீங்க ( நாங்களும் யூத்து தான் மனசுக்குள்ளார )

வினோத்கெளதம் said...

//"எவ்வளோ கஷ்டம் வந்தாலும் வாழ்கையை சந்தோஷமா அனுபவிப்பேன்" என்று கண்ணாவின் இளந்தொந்தியைப் பார்த்து சிரித்தபடியே பதிலளித்தார் ஆசான்.//

துபாய் "SIX PACK" சங்க தலைவர் கண்ணாவை பார்த்து தொப்பை தொந்தி என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்..

வினோத்கெளதம் said...

//அப்புறம் விநோத் இல்லாதது, மொக்கபோட ஆள் இல்லாம போச்சின்னு எழுதியிருக்கலாம்!//

யோவ் அன்னைக்கு நானா மொக்கை போட்டேன் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..:))

கண்ணா.. said...

//வினோத்கெளதம் said...


துபாய் "SIX PACK" சங்க தலைவர் கண்ணாவை பார்த்து தொப்பை தொந்தி என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்..//

"SIX PACK" சிங்கம்னு சொன்னா ரைமிங்கா இருக்கும்...

அதுசரி பேக்ன்னு பாலிதீன் பேக்குதான..?

கண்ணா.. said...

//வினோத்கெளதம் said...

யோவ் அன்னைக்கு நானா மொக்கை போட்டேன் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..//

யோவ் எங்களுக்கு மனசாட்சி இருந்திருந்தா அப்புறமாவும் ஹோட்டல்ல போய் சாப்பிட்டிட்டு பில்லை சுந்தர் அண்ணனை குடுக்க வைச்சுருப்போமா..?

எங்ககிட்ட இருக்கறத பத்தி பேசுய்யா..

நாகா said...

//நான்லாம் பதினாறு வயதினிலே பாக்கும் பொது எங்களுக்கு வயசு பதினாறு... //

சில படங்கள் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் நினைவிலிருந்து அழியாது சார்..

நாகா said...

//யோவ் எங்களுக்கு மனசாட்சி இருந்திருந்தா அப்புறமாவும் ஹோட்டல்ல போய் சாப்பிட்டிட்டு பில்லை சுந்தர் அண்ணனை குடுக்க வைச்சுருப்போமா..?

எங்ககிட்ட இருக்கறத பத்தி பேசுய்யா..//

என்னய்யா நடக்குது இங்க?

ச.செந்தில்வேலன் said...

நல்ல சந்திப்பிற்கு வர முடியாமல் போய்விட்டது.

நாகா.. நல்ல தொகுப்பு...

நாகா said...

நன்றி செந்தில்.. உடுமலை எப்படி இருக்கிறது?

அபுஅஃப்ஸர் said...

நாகா கலக்கிட்டேள்

இதுக்கு மேலே நானும் எழுதுவதற்கு ஒன்னுமில்லை

நீண்டநாள் பழகிய பாசம் ராகவ் அண்ணா குடும்பத்திரையிடையே இருந்தது

கடைசியில் அண்ணி சொன்ன இந்த நட்பு எப்பவும் தொடரவேண்டும் என்ற வாக்கு எப்பவும் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும் என்பது என் ஆசை

அபுஅஃப்ஸர் said...

//கண்ணா.. said...
இந்த சந்திப்பிலும் வடை கொண்டு வந்ததால் ”வடையேழு வள்ளல்கள்”வரிசையில் நம்ம சுந்தர் அண்ணனையும் சேர்த்து விடலாம்
//

இட்லி வடை சேர்த்துக்கோங்க‌

அபுஅஃப்ஸர் said...

//குசும்பன் said...
//'இவர் புகைப்படத்தை, Profileல் போட்டாலே ஓராயிரம் என்ன, ஒரு லட்சம் Followers உறுதி' என்று எல்லோர் மனத்திலும் ஒரே மாதிரியான எண்ணம் ஓடியது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாவம் வயசானவர் இதை எல்லாம் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை!
//

அவரைப்பார்த்தால் வயசானவர் மாதிரியா தெரிந்தது.. எல்லாம் தயிர்சோற்றின் மாயமண்ணே...

16 வயதினிலே டாக்டர் பொருத்தமான தேர்வு

Joe said...

கலக்கல் சந்திப்பு! அழகான படங்கள்...

நாகா said...

வருகைக்கு நன்றி அபு. இது போன்ற சந்திப்புகளை நாம் அடிக்கடி தொடர்வோம்..

நாகா said...

நன்றி ஜோ சார்..

லக்கிலுக் said...

ராகவன், நைஜீரியா இளைஞர் என்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி :-)

நானும் அவரை அங்கிள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊர்க்காரர்!

லக்கிலுக் said...

ராகவன், நைஜீரியா இளைஞர் என்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி :-)

நானும் அவரை அங்கிள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊர்க்காரர்!

நாகா said...
This comment has been removed by the author.
நாகா said...

நன்றி லக்கி, நானும் அவரை டோன்டு இராகவன் போலவே இருப்பார் என்றே எண்ணியிருந்தேன்..

சென்ஷி said...

//Joe said...

கலக்கல் சந்திப்பு! அழகான படங்கள்...
//

:) ரிப்பீட்டே!

நாகா said...

நன்றி சென்ஷி..

Joe said...

ஜோ என்பது நான், சார் என்பது யார்?!?

நாகா said...

மன்னியுங்கள் ஜோ அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

நன்றி தம்பிகளா. என்னையும் என் குடுமத்தினரையும் சந்தோஷம்ப் படுத்திய உங்க அனைவருக்கும் நன்றிகள் பல.

Joe said...

என்ன நாகா, உங்களை விட பத்து வயசு சின்னப் பையனைப் போயி அண்ணே-ன்னு கூப்பிடுறீங்க? ;-)

நாகா said...

வருகைக்கு நன்றி இராகவன் அண்ணே.

நாகா said...

சரிங்.., இனிமே பாத்து கூப்பிடறங்.. ஜோ குட்டி..

என் பக்கம் said...

//இராகவன் நைஜீரியா என்ற அவர் பெயர், பதிவு மற்றும் பின்னூட்டங்களை வைத்து சாருஹாசன் போன்ற ஒரு 50 வயது உருவத்தை கற்பனை செய்திருந்த எங்களுக்கு, 'பதினாறு வயதினிலே' டாக்டர் போன்று அட்டகாசமாய் காட்சியளித்தார் எங்கள் ஆசான்.//

எப்படி இப்படி ?????

கலகிடிங்க நாகா அருமை.

மறக்க முடியாத சந்திப்பு......

எட்வின் said...

பகிர்வுக்கு நன்றி

பிரியமுடன்.........வசந்த் said...

ராகவன் சார் யாருன்னு காட்டியதுக்கு மிக்க நன்றி

நாகா said...

வருகைக்கு நன்றி எட்வின், வசந்த்

Jothig said...

உங்கள் பதிவுகளின் மூலம் நான் முதன் முதலாக வெறும் டவுசரோடு புறக்கணித்து சென்று கொண்டுருந்த சகோதரிகளின் எச்சரிக்கையும் மீறி சென்று பார்த்து வந்து " பத்ரகாளி " படமும், ஆங்கில வழிக்கல்வியில் பயின்று கொண்டுருந்த அக்காவிடம் ட்யூசன் படித்துகொண்டுருந்த அவள் செல்லும் பள்ளி வாகனத்தை பார்க்க படித்துக்கொண்டுருந்த பத்திரிக்கையும், விரட்டி விடும் பார்பர் அண்ணன்களும் போன்ற அனைத்து ஊர் ஞாபகங்களும் வந்து செல்கிறது. மேலும் பெயரே வித்யாசமாய் இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டுருந்த இராகவன் நைஜிரியா சந்தேகம் தீர்ந்தது. அற்புத லே அவுட் உடன் கூடிய வாரப்பத்திரிக்கைகள் படித்த திருப்தி. Jothig http://texlords.wordpress.com

நாகா said...

வருகைக்கு நன்றி ஜோதி அவர்களே..

Post a Comment