Thursday, April 22, 2010

எரிமலையும் மனக்குமுறலும்


ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிருந்து 'Stuttgart' சென்றிருக்க வேண்டியது, ஆனால் இன்னமும் துபாயிலேயே அள்ளிக் கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது ஜெர்மனியில் நடைபெறவிருந்த Training அடுத்த மாதம் சிங்கப்பூருக்கு மாற்றலாகி விட்டது. 

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கை செல்லவிருக்கும் மகிழ்ச்சியில் தினமும் தேதியைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். பழைய அலுவலக நண்பர்கள், பள்ளியில் உடன்பயின்ற காட்டான், அன்பு நண்பர் ப்ரபாகர், எங்க ஊர்காரர் மகேஷ் எனப் பலரையும் காண மே 15 வரை காத்திருக்க வேண்டும். 2005 - 2006ம் ஆண்டுகளில் அங்கிருந்த நாட்களை என் பணிக் காலத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.  

பாயா லேபார் வீட்டின் வரவேற்பறையில் உற்சாகம் பொங்கிய வெள்ளிக்கிழமை இரவுகள், யிஷூன் GVயில் முதல் நாள் முதல் காட்சிக்கு 'திருப்பதி' படத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்று அனைவரிடமும் தர்ம அடிவாங்கியது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கம்யூனிட்டி ஹால்களில் ஆடிய ஷட்டில் மற்றும் டேபிள் டென்னிஸ் மேட்சுகள், Chai Chee டெக் பார்க்கின் ஒவ்வொரு தெருக்களும், லிட்டில் இண்டியாவையும் நினைத்தால் ஏதோ உடுமலைப்பேட்டைக்கே போவதைப் போன்ற உவகையுடன் ஆவலாய் காத்திருக்கிறேன், அடுத்த மாதத்திற்கு.

கொஞ்சம் நாட்டு நடப்புக்கு வருவோம். இவ்வளவு நாட்களும் கண்ணாமூச்சி ஆடிய நித்தியை கைது செய்து விட்டார்களாம். முன்னர் அவன் கூட்டத்தில் கலந்து கொள்ளப் பல நெருங்கிய நண்பர்கள் அழைத்தும் மறுத்துத் திட்டியிருக்கிறேன் . ஆனால் அந்த வீடியோ வந்த பிறகுதான் அவனது பிரச்சங்கங்களை யூ ட்யூபில் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது, சாருவைப் பார்த்து எழுதக் கற்றுக்கொண்டது போல் நித்தியைப் பார்த்துப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 

நடிகர் கமலஹாசன் சொன்னது போல, உண்மையான நாத்திகர்கள் நித்தியைப் போன்ற சாமியார்கள்தான். இவனும் கல்கியும் என்றாவது உதை வாங்குவார்கள் என்று எண்ணினேன், பகுத்தறிவு சாமியார்களான சன் டிவியின் உதவியால் இவ்வளவு சீக்கிரம் மாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இன்னமும் இந்த பங்காரு மட்டும்தான் எதிலும் சிக்காமல் எஸ்கேப்பாகி வருகிறான், அவனுக்கு எப்போது ஆப்பு என்று தெரியவில்லை.

சில நிகழ்வுகள் நாமெல்லாம் மனிதப் பிறவிகளா என்று எண்ண வைக்கிறது. எப்போது இந்த மொழியை காதலிக்கத் துவங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் இப்போதோ, இது மனிதாபிமானம் அற்றவர்களுக்கும் தாய்மொழி என்பதால் வெட்கமாக இருக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று பயின்றது இந்த மொழியில்தான். ஆனால் அன்புடன்.... என்று ஆரம்பித்து அருவெறுப்பாய் சிலர் எழுதுவதும் இந்த மொழியில்தான். இதயமில்லா அந்த முதியவரின் இடுகைக்கு சக மனிதனாய் என் கடும் கண்டனங்களைப் பதிக்கிறேன்.


9 comments:

  1. ஆஹா! என்ன ஒரு அருமையான தகவல்! வாங்க வாங்க! ரொம்ப சந்தோஷம்... ஆவலாய் காத்திருக்கிறோம்...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. சிங்கை பயணத்திற்கு வாழ்த்துகள்!!

    நீண்ட நாட்கள் கழித்துப் பல விசயங்களையும் சுடச்சுட..

    ReplyDelete
  3. என்ன நாகா .. ஆளையே காணோம்...

    எப்பிடி இருக்கீங்க.?

    ReplyDelete
  4. ஆமாங்க நாகா. படுபாவி அருமையாத்தான் பேசுறான்.
    /இந்தச் சிறுமிகளுக்கு 'Good Touch, Bad Touch' போன்ற நிகழ்ச்சிகளை சென்னை மற்றும் மதுரையில் நம் பதிவர்கள் நடத்தியது போல இங்கும் நடத்தலாமே./

    அவசியம் செய்யவேண்டியது.

    ReplyDelete
  5. ரொம்ப நாளாச்சு நாகா எழுதி...நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  6. இந்த பங்காரு மட்டும்தான் எதிலும் சிக்காமல் எஸ்கேப்பாகி வருகிறான்,//
    பயபுள்ள ரொம்ப சாக்கிரதையா பிஸினஸ் பண்ணுது. அது மாட்டுற நாளுதான் எனக்கு தீபாவளி.!

    ReplyDelete
  7. வாய்யா வாய்யா.... +65 81275347 !!!!

    ReplyDelete
  8. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு இடுகை எழுதியிருக்கீங்க போல?
    தினம் ஒரு இடுகை என்று கலக்குபவர்கள் மத்தியில் நீங்கள் "வருடத்திற்கு ஒன்று" என்ற கொள்கையுடன் இருக்கிறீர்களோ?

    //
    ஆனால் அன்புடன்.... என்று ஆரம்பித்து அருவெறுப்பாய் சிலர் எழுதுவதும் இந்த மொழியில்தான். இதயமில்லா அந்த முதியவரின் இடுகைக்கு சக மனிதனாய் என் கடும் கண்டனங்களைப் பதிக்கிறேன்
    //
    யாரந்த முதியவர்?

    சிங்கப்பூர் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Thalaiva...what happened to your dead sea travelogue...i m eagerly waiting.

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...