பா(வே)லைத் திணை...

on Monday, July 27, 2009இலக்கின்றி அலைந்து திரிகிறது மனது. இந்தப் பாலையில் நானும் அந்த ஒற்றைக் கழுகும்தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் நான் அச்சத்துடனும் அது ஆவலுடனும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் கானல் நீர் தானே தவிர எங்கும் ஒரு சொட்டு நீரையும் காணோம்.

கையிலிருக்கும் குடுவையைப் பலமுறை கவிழ்த்துப் பார்த்து விட்டேன், வழிந்த வியர்வையின் இறுதிச் சொட்டு வரை நக்கியும் மேற்கொண்டு நகர உடலில் வலு இல்லை.

மீதமுள்ள ஒரே திரவம், என் உடலில் ஓடும் குருதிதான் என்றாலும் இந்த நொடி வரை நர மாமிசம் உண்ணும் ஆர்வம் எனக்கில்லை. ஆனால் எந்த நொடியிலும் எதுவும் நிகழலாம் இங்கு.

சந்தித்த பலரும் சந்திக்க விரும்பிய பலரும் எதிரே வந்து போனபடி இருந்தனர்.

"ஜூ ஜூ ஜூ குட்டிம்மா இங்க பாரு காக்கா"

"டேய் என்னோட பென்சிலக் குட்றா"

"காலைல இருந்து காட்டுக்கத்து கத்துறேன், வீட்டுக்கு ஒத்தாசையா ஒரு வேலை செய்யறியா? எப்போ பாத்தாலும் அந்த கிரிக்கெட் பேட்டோட எவங்கூடவாவது பொறுக்கப் போறது, என்ன எழவுதான் அதுல இருக்குன்னு தெரியல"

"ச்சே என்ன முக்கு முக்குனாலும் இந்த 'Differential Calculus' மட்டும் மண்டையில ஏற மாட்டேங்குது"

"டேய் நேத்து பஸ் ஸ்டாப்புல அவ என்னத் திரும்பிப் பாத்தா தெரியுமா?"

"ச்சே சனிக்கிழமை கூட காலேஜா? ஏண்டா இந்த இன்ஜினியரிங்க காலேஜ்ல சேந்தோம்னு இருக்கு, அவனவன் ஆர்ட்ஸ் காலேஜுல சேந்து என்னமா ஊர் மேயறானுக"

"டேய் நாளைக்கி படையப்பா ரிலீசாமா, உனக்கு ரசிகர் மன்ற டிக்கெட் வேணுமா? எரனூறு ரூவாதான்"

"மச்சான் வேணாண்டா விட்டுரு, அவ என்னோட ஆளு"

"ஒரு ரவுண்டு மச்சி அதுக்கப்புறம் உனக்கே அந்த டேஸ்டு புடிச்சுரும்"

"உங்கூடப் படிச்சவனெல்லாம் ஒழுங்கா வேலைக்குப் போயி சம்பாரிச்சுட்டு புள்ள குட்டின்னு இருக்கான், இன்னும் எத்தன வருஷமா அரியர் பேப்பரே எழுதீட்டு இருப்ப?"

"ஆத்தா.... நான் பாசாயிட்டேன்"

"சாரி சார் உங்க வயசுக்கு இந்த வேலை சரிப்பட்டு வராது"

"சார் நாளக்கி பொள்ளாச்சி டீமோட பெட் மேட்ச், நீங்கதான் அம்பயரா இருக்கணும்"

"தம்பி மொத மொறையா வேலக்கிப் போகற, போற எடத்துல பாத்து எல்லாத்தையும் அனுசரிச்சு நடந்துக்க"

"என்னங்க இவ்வளவு வயசாச்சு ஒரு சின்ன சர்க்யூட்ட கரெக்டா அசெம்பிள் பண்ணத் தெரியலயா?"

"நாளைலருந்து காலைல எட்டு மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும், இனிமே Flexible Timing எல்லாம் நம்ம ஆஃபீஸ்ல கெடயாது. கம்பெனி நஷ்டத்துல ஓடறதால இனிமே டீ, காபி உள்பட எல்லா சலுகையும் கட் "

"சார் நான் போன மாசம்தான் சார் வேலக்கி சேந்தேன் அதுக்குள்ள தூக்கறிங்களே, ப்ளீஸ் சார் இத நம்பிதான் சார் என்னோட எதிர்காலமே இருக்கு"


"சாரிங்க நானே எத்தன நாளக்கி இங்க உக்காந்திருப்பேன்னு தெரியல, நீங்க வேற ஏதாவது ட்ரை பண்ணுங்களேன்"

புலன்கள் அனைத்தும் செயலிழந்திருந்தன ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை இன்னும் உயிரை இருப்பித்திருந்தது.

வெகு தொலைவில் புள்ளியாய் ஒரு உருவம் நெருங்க, நெருங்க, நெருங்க...

ஆம், யாரோ என்னைக் காக்க தண்ணீரோடு வருகிறார்கள்.

தேவனே, மீட்பரே, ஆதியே, அந்தமே, பரம்பொருளே..

அந்தக் குடுவையிலிருந்த தண்ணீர் என் முகத்தில் அறையப்பட்டது.

"தம்பி, மணி பத்தாச்சு எந்திரி இன்னுமா பகல் கனவு கண்டுட்டு இருக்க? இன்னக்கி புதங்கெழமெ, 'Hindu Opportunities'ல ஏதாவது வேலை வந்துருக்கான்னு பாரு"


29 comments:

சூரியன் said...

கண்டிப்பா எப்பாவாச்சும் எல்லோருக்கும் இப்படி ஒரு கனவு வந்துருக்கும் ..

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க...;)

என் பக்கம் said...

நாகா simply superb

கலகிட்டீங்க..............

கலையரசன் said...

தம்ப்ரீரீரீ..கதை எல்லாம் எழுதுறாரு!
:-))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

Dear naga,
good show.
every one did n't ful fill their imagine or dreams into writing , but you do.my case i will forget my dreams instantly.
great talent grow with it.
you are using non boring words,keep it up.
(tamil writer problem.)

texlords said...

அறிவை தேடிக்கொண்டுருப்பவரே முன் மொழிந்து விட்டாரே? பிறகென்ன?

வாழ்வியல் தத்துவம் எதார்த்த வார்த்தைகளில். அவர் வழி மொழிந்ததும் சரி தான். தமிழ் எழுத்தாளர்களின் சுவை குறையாத வார்த்தைகளில் வாழ்ந்த உங்கள் வாழ்வியல் தத்துவம்.

நீங்கள் போலவே அவரும் என்னை தேடச் சொல்லி இருக்கிறார். வௌியே கேட்கும் பாடலும்
அதைத் தான் ?


" தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்.................."
ஜோதிஜி,


தேவியர் இல்லம். திருப்பூர்.


பின்குறிப்பு,, எனக்கு தாமதமாய் வந்த (உங்கள் படைப்பு) மின்அஞ்சல் அவர்களுக்கு முதலில் சென்று விட்டமைக்கு ஏதோ எதிர்கட்சிகளின் சதி என்றே இங்கு பதிவு செய்கிறேன்?

chidambaram said...

ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ????

கதிர் said...

//ஆனால் நான் அச்சத்துடனும் அது ஆவலுடனும்.//

திடுக்கிட வைக்கின்ற ஆனால் நிதர்சனமான வரிகள் நாகா...

சற்றும் சுனங்காத எழுத்தோட்டம்

மிகவும் ரசித்தேன் நாகா

வாழ்த்துக்கள் நண்பா

அபுஅஃப்ஸர் said...

நாகா வித்தியாசமான கனவு

போரடிக்காத எழுத்தோட்டம், ஒவ்வொரு வரிலேயும் ஒரு சளிப்பு, ஏமாற்றம், விரக்தி தெரிகிறது

மனதை ரொம்ப போட்டுக்குழப்பிக்காதீங்க‌

நேர்மையான தேர்ந்த எழுத்து, வாழ்த்துக்கள் நண்பா

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் நாகா. ரொம்ப ரசிச்சேன்

சூப்பர்

நாகா said...

வருகைக்கு நன்றி சூரியன், கோபிநாத், ப்ரதீப்..

நாகா said...

//கலையரசன் said...
தம்ப்ரீரீரீ..கதை எல்லாம் எழுதுறாரு!
:-))//

யோவ் நீ ஒரு நாளாவது உள்ள என்ன இருக்குன்னு படிச்சுருக்கியா? எவன் ப்ளாக்கு எழுதுனாலும் ஓடிப்போயி ஒரு கமெண்ட்ட போட்டுட்டு ஓடியாந்துற்ர!!!

நாகா said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
Dear naga,
good show.//

மிகவும் நன்றி கார்த்தி, உங்கள் ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுத உற்சாகப் படுத்துகிறது..

நாகா said...

தொடர் ஆதரவிற்கு நன்றி ஜோதிஜி

நாகா said...

chidambaram said...
ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ????//

அதுக்கு நேரம் இருந்தா தினமும் ஒரு இடுகை போடலாமே சிதம்பரம்.. வருகைக்கு நன்றி

நாகா said...

நன்றி கதிர், அபு. மனசப் போட்டு கொழப்பறதுக்கு கூட நேரமில்லையே நண்பா..

நாகா said...

வருகைக்கு நன்றி ஆதவன்..

சென்ஷி said...

அசத்தல் நாகா!

நேசமித்ரன் said...

உண்மையிலேயே சுவாரஸ்யமா போகுது தலைவரே

" உழவன் " " Uzhavan " said...

வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அந்தக் கனவு கொடுத்திருக்கும். நல்ல நடை. வாழ்த்துக்கள்!

நாகா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சென்ஷி

நாகா said...

மெய்யாலுமேவா சொல்றீங்க நேசமித்ரன்??

நாகா said...

ஹூம் கனவு காண்றத தவிர நமக்கு என்ன வேலை உழவரே!!

ச.செந்தில்வேலன் said...

அருமையா எழுதியிருக்கீங்க..

நீங்க எழுதுனத எல்லாருமே கடந்து தான் வந்திருக்கோம்..

நல்ல நடை.. :))

எழுத்து மெருகேறுது.. வாழ்த்துகள்.

நாகா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி செந்தில்..

Prabhagar said...

நண்பரே,

மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...

வேலைப்பளுவில் கவனிக்காமல் விட்டுவிட்டேன்...

நிறைய எதார்த்தமான விஷயங்களை சும்மா அள்ளி தெளித்திருக்கிறீர்கள்...

குட் வொர்க். தொடருங்கள்....

பிரபாகர்.

Joe said...

Sorry about writing comments in English (transliteration not working on this PC)

The first paragraph was simply awesome, I was thinking you were going to continue that way. I mean, continue on those lines and write a short story.

But you related that incident with other real incidents nicely.

The end (that it would be a dream) was predictable.

Rock on!

I strongly condemn, all my blog buddies for not commenting on my translation of 3 Japanese haiku poems (4 votes for a great poetic work? darn, the output is horrible, eh? LOL)

Joe said...

//கலையரசன் said...
தம்ப்ரீரீரீ..கதை எல்லாம் எழுதுறாரு!
:-))//

யோவ் நீ ஒரு நாளாவது உள்ள என்ன இருக்குன்னு படிச்சுருக்கியா? எவன் ப்ளாக்கு எழுதுனாலும் ஓடிப்போயி ஒரு கமெண்ட்ட போட்டுட்டு ஓடியாந்துற்ர!!!

Right said, fred! ;-)

நாகா said...

வருகைக்கு நன்றி ஜோ..!

Post a Comment