Posts

Showing posts from April, 2010

எரிமலையும் மனக்குமுறலும்

Image
ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிருந்து 'Stuttgart' சென்றிருக்க வேண்டியது, ஆனால் இன்னமும் துபாயிலேயே அள்ளிக் கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது ஜெர்மனியில் நடைபெறவிருந்த Training அடுத்த மாதம் சிங்கப்பூருக்கு மாற்றலாகி விட்டது. 
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கை செல்லவிருக்கும் மகிழ்ச்சியில் தினமும் தேதியைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். பழைய அலுவலக நண்பர்கள், பள்ளியில் உடன்பயின்ற காட்டான், அன்பு நண்பர் ப்ரபாகர், எங்க ஊர்காரர் மகேஷ் எனப் பலரையும் காண மே 15 வரை காத்திருக்க வேண்டும். 2005 - 2006ம் ஆண்டுகளில் அங்கிருந்த நாட்களை என் பணிக் காலத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.  
பாயா லேபார் வீட்டின் வரவேற்பறையில் உற்சாகம் பொங்கிய வெள்ளிக்கிழமை இரவுகள், யிஷூன் GVயில் முதல் நாள் முதல் காட்சிக்கு 'திருப்பதி' படத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்று அனைவரிடமும் தர்ம அடிவாங்கியது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கம்யூனிட்டி ஹால்க…