Posts

Showing posts from July, 2009

பா(வே)லைத் திணை...

Image
இலக்கின்றி அலைந்து திரிகிறது மனது. இந்தப் பாலையில் நானும் அந்த ஒற்றைக் கழுகும்தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் நான் அச்சத்துடனும் அது ஆவலுடனும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் கானல் நீர் தானே தவிர எங்கும் ஒரு சொட்டு நீரையும் காணோம்.
கையிலிருக்கும் குடுவையைப் பலமுறை கவிழ்த்துப் பார்த்து விட்டேன், வழிந்த வியர்வையின் இறுதிச் சொட்டு வரை நக்கியும் மேற்கொண்டு நகர உடலில் வலு இல்லை.
மீதமுள்ள ஒரே திரவம், என் உடலில் ஓடும் குருதிதான் என்றாலும் இந்த நொடி வரை நர மாமிசம் உண்ணும் ஆர்வம் எனக்கில்லை. ஆனால் எந்த நொடியிலும் எதுவும் நிகழலாம் இங்கு.
சந்தித்த பலரும் சந்திக்க விரும்பிய பலரும் எதிரே வந்து போனபடி இருந்தனர்.
"ஜூ ஜூ ஜூ குட்டிம்மா இங்க பாரு காக்கா"
"டேய் என்னோட பென்சிலக் குட்றா"
"காலைல இருந்து காட்டுக்கத்து கத்துறேன், வீட்டுக்கு ஒத்தாசையா ஒரு வேலை செய்யறியா? எப்போ பாத்தாலும் அந்த கிரிக்கெட் பேட்டோட எவங்கூடவாவது பொறுக்கப் போறது, என்ன எழவுதான் அதுல இருக்குன்னு தெரியல"
"ச்சே என்ன முக்கு முக்குனாலும் இந்த 'Differential Calculus' மட்டும் மண்டையில ஏ…

ஆப்பரசன் அளித்த அவார்டு...!

Image
உடன்பிறப்பே,
விருதுகள் எமக்கொன்றும் புதிதல்ல. பத்து வயதில் கலைமாமணி, பிலிம்பேர், ஆஸ்கர். இருபது வயதில் கோல்டன் குளோப், பத்மஸ்ரீ, பதம பூஷன். முப்பது வயதில் பாரத ரத்னா, நோபல் என்று உலகமே எம்மைக் கொண்டாடினாலும் இன்று அமீரக ஆப்பரசன், எம் அன்பன் கலையரசனின் 'சுவாரஸிய பதிவர் விருதை'ப் பெற்றதும் உள்ளம் உவகையுற்றது, நெஞ்சம் நெகிழ்ந்தது, இதயம் இனித்தது, ஆமாம், கண்களும் கூடப் பனித்தது.
அவர் சொன்னார், எம் தமிழின் வீச்சும் வீரியமும் ஆச்சரியப்படுத்துகிறது என்று. அவருக்கு யாம் வருத்தத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எம் தமிழின் வீரியத்துக்கு இதுவரை எந்த ஒரு ஓவியமும் மயங்கவில்லை, மடங்கவில்லை, மடியவுமில்லை.
எம் தமிழ் தந்தையின் மண்ணிலிருந்து சகோதரர் கதிரும் அதே விருதை எமக்களித்து எம்மை மகிழ்வித்துள்ளார். உடன், மேலும் பல உடன்பிறப்புகளுக்கு இவ்விருதைப் பகிருமாறு அன்புக்கட்டளையும் இட்டுள்ளார். அந்தோ, எம் கழகக் கண்மணிகள் பலரும் இவ்விருதை எமக்கு முன்பே பெற்று விட்டதாலும், விருதுக்கு எண்ணிக்கை ஒரு தடையல்ல என எண்ணியதாலும் எம் திருக்கரத்தால் கீழ்கண்ட கண்மணிகளுக்குப் பரிந்துரைக்கிறேன்.
1. ச. ச…

அ ஆ மே நி பள்ளி நினைவுகள் - 2

Image
முதல் பாகம் இங்குநூறு ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்நாட்டின் சிறந்த மனிதர்களையும், தலைசிறந்த தறுதலைகளையும் உருவாக்கிய புகழ் வாய்ந்தது எங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி.
கண்ணனைப் பிரிந்து தனியே டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில், "இவங்க நம்மள விடப் பெரிய ரவுடிங்களா இருப்பாங்களோ" என்று அஞ்சியபடியே மருண்ட விழிகளோடு(?) நுழைந்தேன். வழக்கம்போல் கடைசி பென்ச்.
காலை 9 மணி - முதல் நாள், முதல் வகுப்பு ஆரம்பம். புயலாய் உள்ளே நுழைந்தார் 'காக்காப்பீ'. அவர்தான் எங்கள் வகுப்பாசிரியர். 'கா. கண்ணபிரான்' என்ற அவர் திருநாமம் காலப்போக்கில் மருவி எங்களிடம் 'காக்காப்பீ'யாகி விட்டிருந்தார்.
அட்டெண்டன்ஸ் மட்டும் எடுத்துவிட்டு "தம்பி எல்லாம் சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்கு வந்துருங்க. அதுதான் ஆறாம் வகுப்புக்கு டியூஷன் டைம்" என்று அசால்டாகச் சொல்லிவிட்டு வெளியேறி விட்டார்.
முக்கால்வாசி மாணவர்கள் அன்று மாலை அவர் வீட்டில் ஆஜர், என்னையும் சிலரையும் தவிர்த்து. அப்போதுதான் டியூஷன் செல்லமறுத்த சிவமணி, துளசிதாஸ், ராஜேஷ் போன்ற புரட்சியாளர்களின் நட்பு கிட்டியது. இவர்கள் அனைவரும் என்னையும் கண்ணன…

அண்ணா சாலையில் அம்மணமாய் - பதிவுலகம்

மூன்று நாட்களாய் ஒருவன் அண்ணா சாலையில் அம்மணமாய் ஓடிக்கொண்டிருக்கிறான். செல்லும் வழியெல்லாம் எதிர்படுவோரின் மீது சேற்றையும் வாரி இறைக்கின்றான். அனைத்து ஊடகங்களிலும் அவனைப் பற்றித்தான் பேச்சு, ஒரே நாளில் உலகப் பிரபலமாகிறான். நோக்கம் நிறைவேறியபின்,
"நான் துணியில்லாமலா ஓடினேன்? அய்யோ எனக்குத் தெரியவில்லையே, எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்" என்று பேட்டி கொடுக்கிறான்.
அனானி, அதர் ஆப்ஷனை எடுக்கச் சொல்லி இரண்டு நாட்களாய் எல்லோரும் அவரின் இடுகைகளில் கதறுகின்றனர். இன்று காலையில் எதுவுமே தெரியாதவர் போல "நண்பர் நர்சிம்முக்கு ஒரு அவசர கடிதம்" என்று எழுதி, நீக்கி விட்டேன் என்கிறார். அனானிப் பின்னூட்டமிடும் ஆப்ஷனை மட்டும்தான் நீக்கியுள்ளார். ஆனால் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அனானிகள் எழுதிய ஆபாசப் பின்னூட்டங்கள் நீக்கப்படவில்லை. மாறாக அதே இடுகையில் அதனைக் கோடிட்டுக் காட்டுகிறார். யாரைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை, மாய்ந்து மாய்ந்து ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் இடுகை எழுதத் தெரிகிறது, அதில் விழும் பின்னூடங்களை முதல் பக்கத்திலேயே ஓட்டிவிடத் தெரிகிறது, ஆனால் …

அ ஆ.. மே நி பள்ளி நினைவுகள்

Image
பயப்படாதீங்க, இது S.J. சூர்யா படிச்ச பள்ளிக்கூடம் இல்ல, நான் படிச்ச அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி - உடுமலைப்பேட்டை. வெறும் அமேநி (மேனியல்ல) பள்ளியாத்தான் ஒரு காலத்துல இருந்தது. ஆனா என்னோட துரதிர்ஷ்டம் பாருங்க, நான் அங்க போயி ஆறாப்பு சேந்த உடனே புள்ளைங்களுக்குத் தனியா ஒரு அபெமேநி பள்ளிய எங்கூருல ஆரம்பிச்சுட்டாங்க. அது ஒண்ணுதான் கொற, மத்தபடி வாழ்க்கைக்கு? தேவையான எல்லா விஷயத்தயும் அங்கதான் கத்துகிட்டேன். அது சரி, அது என்ன மாதிரியான வாழ்க்கைக் கல்வின்னு பாக்கறதுக்கு முன்னாடி அஞ்சாவது வரைக்கும் என்ன கிழிச்சோம்னு பாப்போமா?
ஒழுங்கா பால்வாடிக்குப் போயி பக்கத்துல உக்காந்துட்டு இருந்த பய்யனுங்களயும் புள்ளைங்களயும் கிள்ளி வெச்சு, பொராண்டிவுட்டு வாராவாரம் குடுக்கற பல்பொடி, அப்பப்போ குடுக்கற எம்ஜியாரு செருப்புன்னு வாங்கிட்டு பயங்கர சந்தோஷமா வாழ்க்கை போயிட்டு இருந்தப்போ எங்கம்மாவுக்கு திடீருன்னு என்னய இங்கிலீசு மீடியத்துல சேக்கோணும்னு ஆச வந்துருச்சு. பால்வாடியில கூடப் படிச்சவனெல்லாம் நேரா ஒண்ணாப்பு போயிட்டானுக, ஆனா என்னய மட்டும் நாலரை வயசுல கொண்டு போயி குறிச்சிக்கோட்டை RVG ஸ்கூல்ல 'எல்கேஜி'…

செம்ம சாணி மச்சி..:(

Image
கடந்த வாரம் முழுவதும் சரமாரியாகச் சுழன்றடித்து சாணி அள்ளியதில் தமிழ்ப் பதிவுலகில் நடந்த பல பூகம்பங்களில் பங்கெடுக்க முடியவில்லை. சரி நம் பங்குக்கு வலையுலக விஜய் மல்லையா, காக்டெயில் காண்டா மிருகம், நண்பர், பதிவர் ஜோவின் மண்டையை உடைத்து அவரைப் 'பலமுக மன்னன் ஜோ'வாக்கலாம் என்றால், அவரும் மயிரிழையில் தப்பி விட்டார். அந்த மகிழ்ச்சியிலோ என்னவோ துபாய் செல்லவிருந்த என்னையும் தண்ணியனாக்கி, அவரது காரிலேயே சென்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினார்.
'Boarding Card' போடும் இடத்தில் இருந்த ஆபீசர் ஒரு 'fresher' என்று நினைக்கிறேன், தடவு தடவு என்று தடவி பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க வைத்துக் கொன்றார்.
"Sorry Sir, some problem in the system. This is your boarding pass. You can proceed to gate number 6 after immigration"
ஆறாம் எண் கேட்டின் எதிரே இருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தேன். மூன்று இரவுகளாய் சரியான உறக்கமில்லாதலால், உடல் அசதியும் எரிச்சலுமாய் கண்கள் சற்றே அயர்ந்தன.
நீருக்குப் பதிலாக எருமை மற்றும் மாட்டுச் சாணம் நிரம்பியவொரு குளத்தில் ஏகாந்தமாய் நீந்திக் கொ…

ஒரு குறும்பயணம்..

Image
முதன்முதலில் எப்பொழுது, எங்கே பயணிக்கத் துவங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் வீட்டை விட்டு எங்காவது பயணிக்கப் போகிறோம் என்றால் மனதில் ஒரு பேருவகை குடிகொண்டு விடும். சிறுவயதில் பேருந்தைக் கண்டவுடன் அம்மாவின் கையை விடுத்து ஓடிச்சென்று படியில் உட்கார்ந்து ஏறி நின்று 'சீக்கிரம் வாம்மா' என்று கத்தியது இன்னும் நினைவில் இருக்கிறது. மாலை பள்ளி முடிந்ததும் அண்ணாச்சி கடையிலிருந்து எடுத்த சணல் கயிற்றின் இரு முனைகளையும் முடிச்சிட்டு ஒரு பேருந்து செய்வேன். அதில் நண்பர்களுடன் நுழைந்து ஓடும்போது நான்தான் ஓட்டுனர், நடத்துனர் எல்லாம். மாரியம்மன் கோவில் திருவிழாவில் அடம்பிடித்து வாங்கிய விசிலை ஊதிக்கொண்டே கால்கள் ஓயும் வரை எங்கள் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்.

நகருக்குப் பேருந்தில் செல்லும்போது எப்பொழுதேனும் 'இரயில் கேட்' மூடியிருந்தால் பயணிகள் அனைவரும் 'போச்சுடா, கேட் போட்டுட்டான்' என்று சலித்துக்கொள்ள, நானோ 'ஐ, கேட் போட்டுட்டாங்க' என்று அப்பாவின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு கீழே இறங்கி, இரயிலின் ஒவ்வொரு பெட்டிகள் கடப்பதையும் கண்கொட்டாமல் பார்த்த…

நண்பர்கள் தேநீர் விடுதி

Image
இருபத்து நான்கு மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த அந்த முச்சந்தியில் முளைத்த முதல் டீக்கடை 'நண்பர்கள் தேநீர் விடுதி'தான். எங்கள் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளியிருந்த அந்தக்கடையின் முதலாளி நடராஜனுக்குத் தன் கடையை விட தமிழின் மேல் அவ்வளவு ஆர்வம். தினமும் காலை ஐந்து மணிக்கு டவுனிலிருந்து முதலில் வரும் 11ம் நம்பர் பஸ்ஸில் அவர் கடைக்கு தினமணி, தினத்தந்தி, தினமலர், என்று மூன்று பேப்பர்களும் வந்து விடும். கடைக்கு வரும் யாரேனும் அவரிடம்
"என்னங்கண்ணா தினத்தந்தி மட்டும் போதுங்களே" என்றால்,
"டேளேய் நானென்ன போண்டா மடிக்கறதுக்கு மட்டும்தான் பேப்பர் வாங்கறன்னு நெனச்சீங்களா?" என்று சற்றே சூடாவார்.
வாடிக்கையாளர்களை கோபிக்கக் கூடாதென்று உடனே "அதொண்ணுமில்ல கண்ணு, நம்முளுக்கு ஒரு சேதிய ஒருத்தன்கிட்ட கேக்கரதவிட நாலு பேர்த்துகிட்ட கேட்டதான் அதோட உண்மெ நெலவரந்தெரியும் அதுக்காகத்தான்" என்று சூடான டீயை நீட்டிக்கொண்டே சொல்வார்.
தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் நேராக அவர் கடைக்குத்தான் ஓடுவேன். தினத்தந்தியில் சிந்துபாத் இன்று லைலாவைக் கண்டுபிடித்து விடுவானா என்று தெரிந…