
முதன்முதலில் எப்பொழுது, எங்கே பயணிக்கத் துவங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் வீட்டை விட்டு எங்காவது பயணிக்கப் போகிறோம் என்றால் மனதில் ஒரு பேருவகை குடிகொண்டு விடும். சிறுவயதில் பேருந்தைக் கண்டவுடன் அம்மாவின் கையை விடுத்து ஓடிச்சென்று படியில் உட்கார்ந்து ஏறி நின்று 'சீக்கிரம் வாம்மா' என்று கத்தியது இன்னும் நினைவில் இருக்கிறது. மாலை பள்ளி முடிந்ததும் அண்ணாச்சி கடையிலிருந்து எடுத்த சணல் கயிற்றின் இரு முனைகளையும் முடிச்சிட்டு ஒரு பேருந்து செய்வேன். அதில் நண்பர்களுடன் நுழைந்து ஓடும்போது நான்தான் ஓட்டுனர், நடத்துனர் எல்லாம். மாரியம்மன் கோவில் திருவிழாவில் அடம்பிடித்து வாங்கிய விசிலை ஊதிக்கொண்டே கால்கள் ஓயும் வரை எங்கள் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்.
நகருக்குப் பேருந்தில் செல்லும்போது எப்பொழுதேனும் 'இரயில் கேட்' மூடியிருந்தால் பயணிகள் அனைவரும் 'போச்சுடா, கேட் போட்டுட்டான்' என்று சலித்துக்கொள்ள, நானோ 'ஐ, கேட் போட்டுட்டாங்க' என்று அப்பாவின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு கீழே இறங்கி, இரயிலின் ஒவ்வொரு பெட்டிகள் கடப்பதையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.
"அப்பா, நம்முளும் ரயில்ல போலாம்ப்பா"
"கண்டிப்பாப் போலாஞ்சாமி, இப்பொ பஸ்ஸுக்குள்ள ஏறு"
உறவினர்கள் அனைவரும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குளேயே இருந்ததாலும், பள்ளி, கல்லூரி என அனைத்தும் அருகிலிருந்த நகரங்களிலேயே பயின்றதாலும் இரயிலில் செல்லும் வாய்ப்பு கல்லூரி முடியும் வரை கிடைக்கவே இல்லை. ஆனால் தினமும் கல்லூரிக்குச் சென்ற பேருந்துப் பயண அனுபவங்களை வைத்து ஒரு காவியமே எழுதலாம்.
படிப்பு முடிந்து சென்னையில் பணியில் சேருவதற்கு, கோவையிலிருந்து கிளம்பியதுதான் முதல் இரயில் பயணம். கலங்கிய கண்களுடன் கை அசைத்த அம்மாவின் முகம், வீட்டை, உறவினர்களை, நண்பர்களைப் பிரிந்து நீண்ட தூரம் செல்லும் துக்கம், ஏக்கம், எதிர்காலம் குறித்த அச்சம் என எல்லாம் சேர்ந்து அந்த முதல் பயணத்தை மிகுந்த வெறுப்புக்குள்ளாக்கின.
ஆனால் பணி நிமித்தமாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நகரங்களை சுற்றத் துவங்கியதும் என்னுள்ளிருந்த அந்தச் சிறுவன் மீண்டும் பேருவகையோடு பயணிக்கத் துவங்கினான். விதவிதமான உணர்வுகள், மனிதர்கள், வாழ்க்கைகள் என ஒவ்வொரு பயணத்திலும் ஒளிந்திருந்த ஆச்சரியங்களும் அனுபவங்களும் ஏராளம். இதோ இன்றும் ஒரு குறும்பயணம் துவங்குகிறது. துபை - சென்னை - திருச்சி - தஞ்சாவூர் - பழனி - உடுமலை - கோவை - சென்னை - ஷார்ஜா - துபை என மூன்றே நாட்களில் சென்று திரும்ப வேண்டியதை எண்ணிச் சற்றே மன அயர்ச்சி ஏற்பட்டாலும், காதலியைக் காணப்போகும் ஆவல் அதை மறக்கச் செய்கிறது. ஆம், நான் பயணங்களின் காதலன்.
Really Superb Flow of writing..:))
ReplyDeleteEnjoy the trip Man..
Welcome to India
ReplyDeleteநாகா... அற்புதமான எழுத்து வடிவம்.....
ReplyDeleteநெஞ்கை கீறும் நினைவுகள்..
ரசித்தேன்...
ரயில் பாதை ஓரம் நின்று கடக்கும்
ரயிலின் தடதடக்கும் சப்தம் கேட்ட உணர்வு..
எப்பப்பா கிளம்புற?
ReplyDeleteஒன்னுமே சொல்ல சொல்லமாட்டுற..
ம் பயண வாழ்த்துக்கள்!!
Happy Journey....Enjoy... :)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநன்றி வினோத்..
ReplyDeleteநன்றி கதிர்..
ReplyDelete//எப்பப்பா கிளம்புற?
ReplyDeleteஒன்னுமே சொல்ல சொல்லமாட்டுற..
ம் பயண வாழ்த்துக்கள்!//
ஏர்போர்ட்ல இருக்கேன் மச்சி. ஒரு அவசரப் பயணம் அதுதான் யாரிடமும் சொல்ல முடியல..
உண்மைதான் அவர் எழுத்தின் தாக்கம் சில நேரங்களில் உறக்கமே வருவதில்லை
ReplyDeleteஎவ்ளோ அழகான பதிவு...ஓட்டும் போட்டாச்சு....
ReplyDeleteபயணங்கல் முடிவதில்லை...
ReplyDeleteஅந்த பயணக்காதலனின் பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்
எழுத்தோட்டம் அருமை, பயணத்திற்காக மனது ஏங்கியது அன்று.....
//உண்மைதான் அவர் எழுத்தின் தாக்கம் சில நேரங்களில் உறக்கமே வருவதில்லை//
ReplyDeleteரெட்மகி, யாருக்கோ போட வேண்டிய கமெண்ட இங்க பொட்டுட்டீங்களா?.. வருகைக்கு நன்றி
//எவ்ளோ அழகான பதிவு...ஓட்டும் போட்டாச்சு...//
ReplyDeleteவருகைக்கு நன்றி செந்தழல்.. அவ்வளோ அழகாவா இருக்கு?
அபு:-//பயணங்கல் முடிவதில்லை...
ReplyDeleteஅந்த பயணக்காதலனின் பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்
எழுத்தோட்டம் அருமை, பயணத்திற்காக மனது ஏங்கியது அன்று...//
உலோகப்பறவை எதிரே காத்துக் கொண்டிருக்கிறது.. வாழ்த்துக்களுக்கு நன்றி அபு
அருமை...
ReplyDeleteசென்று வாருங்கள் நாகா.
மகிழ்வான பயணமாக இதுவும் அமையட்டும்...
பயணங்களின் காதலனுக்கு, உங்கள் காதலியைப் பற்றி அழகாக விவரித்துள்ளீர்கள்..
ReplyDeleteகயிறு கட்டி வண்டி ஓட்டுறது இருக்கே.. அடடா.. நல்ல பதிவு
நாகா, நண்பர்கள் தேநீர் விடுதியில் தொடங்கி, உங்கள் பதிவின் பல இடுகைகளையும் படித்தேன். நல்ல எழுத்து நடை உங்களுக்கு அமைந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப பொறாமையா இருக்கு நாகா, உங்கள் எழுத்தையும், உங்களுக்கு வாய்த்த பயணங்கள் செய்யும் சூழலையும் பார்த்து.
ReplyDeleteபயணங்களின் காதலன்...
வாழ்த்துக்கள்.
கோவை விமான நிலயத்திலிருந்து :- நன்றி சாரதி, செந்தில், செல்வராஜ், ஜோ..
ReplyDelete