இது கொலையல்ல, வதம்..!

on Wednesday, June 10, 2009

வலைப்பதிவுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேய்ந்து கொண்டும் முகர்ந்து கொண்டும் இருந்த எனக்கு, எழுதலாம் என்ற எண்ணம் வந்தாலே ஏதோ கொலை செய்யத் தயாராவது போன்ற பயமும் படபடப்பும் ஆட்கொண்டு விடும். போதாக்குறைக்கு அடிக்கடி கனவில் வேறு கீழே உள்ள உருவம் வந்து "இது கொலையல்ல, வதம்" என்று பயமுறுத்திச் செல்லும்.இருப்பினும் திரு. சுந்தரராமன், அய்யனார் மற்றும் அமீரக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்போடு இன்று முதல் உங்களை 'வதம்' செய்ய இந்த வலைப்பூவைத் துவங்குகிறேன். வாழ்வுப் புத்தகத்தின் 10,000 பக்கங்களுக்கு மேல் வாசித்து விட்ட நான், என் நினைவில் உள்ள சில பக்கங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கருத்துக்களையும், விமர்சனங்களையும் நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,

- நாகா

20 comments:

வெட்டிப்பயல் said...

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு :)


வாங்க வாங்க!!!

கிரி said...

அடிச்சு தாக்குங்க.. வாழ்த்துக்கள் ;-)

சென்ஷி said...

வருக வருகவென அன்புடன் வரவேற்கின்றோம் :)

நாகா said...

நன்றி வெட்டி, கிரி,சென்ஷி..

Kanna said...

வாங்க நாகா,

ஆரம்பமே அட்டகாசமா ஆரம்பிச்சுருக்கீங்க..


வாழ்த்துக்கள்

நாகா said...

நன்றி கண்ணா

இவன் said...

வாங்க வந்து கலக்குங்க........

வினோத்கெளதம் said...

நாகா வாங்க ஆரம்பமே அட்டகாசமா இருக்கு..

ஆயில்யன் said...

அட்டாக் பண்றதுன்னு முடிவு எடுத்துட்டா,தொபுக்கடீர்ன்னு களத்தில குதிச்சிடவேண்டியதுதானே...!

ஏன் இம்பூட்டு யோசனை !


:))

வாழ்த்துக்கள் வாங்க வாங்க!

நாகா said...

நன்றி வினோத், இவன், ஆயில்யன்..

அது ஒரு கனாக் காலம் said...

மணி ஆறு .... வருக வருக என வரவேற்கிறோம் ....

kalai said...

ஆரம்பிச்சிட்டான்யா... ஆரம்பிச்சிட்டான்ய்ய்யா!
தொடருங்கள்..வாழ்த்துகள்!!
அடிச்சு ஆடு மாமே...

என் பக்கம் said...

அருமை

வாழ்த்துகள் நாகா

கலக்குங்க..........

நாகா said...

நன்றி 'என் பக்கம்' தோழரே..

ஷோபிகண்ணு said...

//ழுதலாம் என்ற எண்ணம் வந்தாலே ஏதோ கொலை செய்யத் தயாராவது போன்ற பயமும் படபடப்பும் ஆட்கொண்டு விடும்.//

சூப்பரப்பு....

Thiruvengadam said...

அருமையான முயற்சி
அட்டகாசமான ஆரம்பம்
வாழ்துக்கள் நாகா
தொடர்ந்து எழுதுங்கள்..

நாகா said...

வருகைக்கு நன்றி ஷோபி, திருவேங்கடம்..

நாமக்கல் சிபி said...

சூப்பர்! வாழ்த்தி வரவேற்கிறேன்!

நாமக்கல் சிபி said...

நான் இங்க வந்துட்டுப் போனதா ஆப்புகிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிடுங்க!

cheena (சீனா) said...

அன்பின் நாகா

ஏறத்தாழ ஆறு மாதங்கள் கழித்து, வலைப்பூவினிற்கு வந்தமைக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.

நல்வாழ்த்துகள்

Post a Comment