
மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகவும் சுதந்திரமான கண்டிப்பு குறைந்த இஸ்லாமிய நாடு பஹ்ரைன். மேற்கத்திய கலாச்சாரமும், இஸ்லாமியப் பழமைவாதமும் சரிசமமாக உள்ள இங்கு கடந்த 2004ம் ஆண்டு ஃபார்முலா ஒன் பந்தயங்களை நடத்தும் ஓடுதளம் 'F1 Circuit' திறக்கப் பட்டது.
ஃபார்முலா ஒன் பந்தயங்களைப் பற்றி எனக்கு 'அ' னா, 'ஆ' வன்னா கூடத் தெரியாது. ஆனாலும், தொலைக்காட்சியில் அந்தக் கார்களின் ஒலியைக் கேட்டலே உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகமும் வேகமும் வந்து விடும். அலுவலகப் பணி காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் பஹ்ரைன் செல்ல நேர்ந்தது. அதே சமயத்தில் அங்கு F1 நடக்கவிருப்பதை அறிந்ததும், அதனை நேரில் காண வேண்டுமென்று மனம் துடிக்க ஆரம்பித்தது. உடனே பஹ்ரைனில் இருக்கும் நண்பனின் உதவியுடன், அமீரக நண்பர்கள் சிலருக்கும் சேர்த்து 26ம் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருந்த இறுதிப் போட்டிக்கு முன்பதிவு செய்தோம்.
ஞாயிற்றுக்கிழமை அலுவலக தினமானதால், அன்று வரப்போகும் வயிற்றுப் போக்கு விடுமுறையை முன்னிட்டு, வியாழனன்று மாலையே அமீரகத்து நண்பர்கள் பஹ்ரைன் கிளம்பி வந்தனர். "பாட்டிலுடன் வந்தால்தான் வீட்டினுள் விடுவேன்" என்ற நண்பனின் நிபந்தனைக்கு பயந்து மூன்று பாட்டில்களும் (பூஸ்ட் தாங்க) உடன் வந்தன.
பஹ்ரைன் உலக வர்த்தக மையம்
கோடையின் தாக்கம் ஏற்கனவே துவங்கி விட்டதால், இரவுகளில் பூஸ்ட் குடித்துக்கொண்டே பழைய நினைவுகளை அசை போடுவது என்றும், பகலில் தூங்கி விட்டு, மாலையில் வெளியில் எங்காவது செல்லாம் என்றும் முடிவானது. வியாழன் இரவு, கல்லூரி நாட்களைப் பற்றி ஆரம்பித்த விவாதம் காதல், திருமணம் என்று பிதற்றலும், பிளிறலுமாக எங்கெங்கோ சுற்றி வெள்ளி அதிகாலை வரை நீண்டது.
எப்போது உறங்கினோம் என்று நினைவில்லை, ஆனால் ஒவ்வொருவராக விழித்து மாலைக் கடன்களை முடித்த போது மணி 4. அருகில் இருந்த அரபு உணவகத்தில் மீதமிருந்த மதிய உணவை முடித்துக் கொண்டு பஹ்ரைனையும், சௌதியையும் இணைக்கும் 'King Fahd Causeway'யை நோக்கிப் பயணமானோம். இது கடலின் நடுவே 18 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட, 28 கிலோ மீட்டர் நீள நான்கு வழிச்சாலை.
King Fahd Causeway - செயற்கைக் கோள் புகைப்படம்
'Causeway'ன் ஒரு பகுதி
தீவின் இரு எல்லைகளிலும் ஒரு கண்காணிப்பு கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் மேலிருந்து பார்த்தால், பாலத்தின் மறு பகுதியும் சௌதி நாட்டின் 'கோபர்' நகரமும் இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் அற்புதமாய் மின்னுகின்றன. சில மணி நேரங்களை அங்கு செலவளித்த பின், மீண்டும் பஹ்ரைனில் உள்ள 'Zallaq' கடற்கரை நோக்கித் திரும்பினோம்.
'Zallaq' கடற்கரை
இங்கு கடலினுள் மணலைக் கொட்டி, ஆழத்தைக் குறைத்துள்ளதால் 100 மீட்டர் தூரம் வரை கடலில் உள்ளே நடந்தே செல்லலாம். இங்கும் சில மணித் துளிகள் செலவழித்து விட்டு வரும் வழியில் Boost குடிக்கத் தேவையான உணவுப் பொருட்களுடன் வீடு திரும்பிய போது, இரவு மணி 10.
F1 அனுபவங்கள் அடுத்த பாகத்தில்..
எடுத்தவுடனே பயனக்கட்டுரையா? இன்னும் கொஞ்சம்
ReplyDeleteவிரிவாக எழுதியிருக்கலாம்... எத்தனை பாகங்கள்
வரபோகிறது? தொடருங்கள்... அருமை!!
அடுத்த பாகத்தில் இன்னும் சற்று விரிவாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.
ReplyDeleteராத்ரி புல்லா .உக்காந்து .. பூஸ்ட் குடிச்சோம் !!!!?????
ReplyDelete.
உங்களுக்கு சிலேடை நன்றாக வருகிறது... நல்ல தகவல்கள்,
நன்றி சுந்தரராமன் சார்..
ReplyDeleteஆஹா...சிங்கம் களத்துல இறங்கிடுச்சேய்ய்ய்ய்ய்..........
ReplyDeleteநன்றி கண்ணா.. Senior சிங்கங்களாகிய உங்கள் அனைவரின் முன் நான் ஒரு சுண்டெலி.. :-)
ReplyDeleteArputham
ReplyDeleteஅட சூப்பரா இருக்கு பயண கட்டுரை. அடுத்த பாகம் எப்ப வரும்
ReplyDeleteஇந்த வார மத்தியில் விஷ்ணு. வருகைக்கு நன்றி..
ReplyDeleteபுகைப்படங்களும், வர்ணனையும் அருமை.
ReplyDeleteகொஞ்சம் பொறாமையா இருக்கு.