தொலைந்த இரவுகளில்..

on Sunday, August 9, 2009நினைவுகளால்
தனித்து
விடப்பட்டதென்
கனவு

தொலைந்த இரவுகளில்
துணையின்றித்
தேடிய
விடியலும்

அலைந்து திரிந்த
கால்களை
அணைத்துக்
கிழித்த முட்களும்

விரிந்த சிறகுகளை
முடக்கிய
வீட்டுக்
கூரையும்

உடைந்த அகத்தின்
உவகை
முகமும்

கலைந்த கூந்தலாய்
கருகிய
கால வெளியில்

கடை விரித்துக்
காத்திருக்கிறேன்
கனவுகள் -
விற்பனைக்கு

விடை இல்லை
விலைமகளா
நான் என்றால்...?