Posts

Showing posts from November, 2009

இந்தியாவில் சில நாட்கள்..

Image
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் சில தினங்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வழக்கம் போல் பல நிபந்தனைகளுடன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும், இருபது முப்பது பேர்களை இன்டர்வியூ செய்து இரண்டு அல்லது மூன்று பேர்களை எங்கள் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும், ஏதேனும் பிரச்சினை என்றால் எந்த நேரமும் லாகின் செய்ய வேண்டும் போன்று பல விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் வர முடிந்தது.

ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வாங்கலாமென்று இருக்கிறேன். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால் அதன் பெர்ஃபார்மன்ஸ், பேக்கேஜ்கள் பற்றி தெரிவியுங்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு திருமணங்கள், உறவினர் வீடுகள் என்று இங்குமங்கும் அலைய வேண்டியுள்ளதால் அதுவரை, அவ்வப்போது நண்பர் உடுமலை டாட் காம் சிதம்பரம் அவர்களின் புத்தகக் கடையில் இருந்தபடி இணையத் தொடர்பிலிருக்க முயற்சிக்கிறேன்.

பதிவர்களையும், வாசகர்களையும்(???) சந்திக்க மிகவும் ஆவலாயிருப்பதால், வந்ததும் நேற்று முதல் வேலையாக ஒரு ஏர்செல் அலைபேசி எண்ணை எடுத்து விட்டேன் (+91)-9715106693.  முடிந்தால் அழையுங்கள்.


சென்னையில் பதிவர்கள் சிலரை சந்திக்க விருப்பம் தெரிவ…

சா(வு)க் கடலை நோக்கி..!

Image
இறந்த கடல் அல்லது செத்த கடல் அல்லது சாக்கடல் என்றழைக்கப்படும் இந்த ஏரிதான் இஸ்ரேலையும் (பாலஸ்தீனம் மேற்குக் கரை) ஜோர்டானையும் பிரிக்கிறது. பள்ளி நாட்களில் புவியியல் புத்தகங்களில் படித்திருப்பீர்கள், உலகின் மிகவும் தாழ்வான இடமான இங்குள்ள நீரின் உவர்ப்பால் எந்த உயிரினமும் வாழ முடியாது, இதன் அடர்த்தியால் எவராலும் இதனுள் மூழ்க முடியாது. மனித வாழ்வின் மூன்று மிகப்பெரிய மதங்களின் வரலாற்றில் இந்த ஏரிக்கும் இதன் ஒரே நீர் வரத்தான ஜோர்டான் நதிக்கும் மிக முக்கியப் பங்குண்டு.

காலை ஏழு மணிக்குத்தான் விமானம் என்றாலும் நேரத்தில் எழ முடியுமா என்று சிறிது சந்தேகமாகத்தான் இருந்தது. இரண்டு காரணங்கள் - கடந்த சில மாதங்களாகவே 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பதால் காலை பத்து மணிக்கு எழுந்து ராக்கோழியாக இரவு ஒரு மணி வரை விழித்துப் பழகி விட்டது. இரண்டாவது காரணம் அம்மணியை நேற்று முந்தினம்தான் ஊருக்கு அனுப்பியிருந்தேன்.

எதிர்பார்த்தது போலவே நான்கு மணியிலிருந்து கூவிக் கொண்டிருந்த அலாரத்தை ஸ்னூஸ் போட்டு போட்டு திடீரென எதற்காக அடிக்கிறது என்று யோசித்த போது மணி ஐந்தரை. அவசரமாக காலைக் கடன்களை முடித்து ஐந்து ஐம்பதுக்க…

ஆறோடும் மண்ணில்..!

Image
விவசாய நிலங்கள் குறைந்து வருவதையும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பற்றியும் நண்பர் கதிர் ஆற்றாமையுடன் எழுதிய இந்த இடுகையைப் படித்ததும் இன்று மனை நிலங்களாக மாறியுள்ள எங்கள் ஊரின் வயல்கள் நினைவுக்கு வந்தன.
ஏழு குளத்துப் பாசனம், பி.ஏ.பி வாய்க்கால் நீர், அமராவதி ஆறு, பாலாறு, அமராவதி அணை, திருமூர்த்தி அணை என்று தண்ணீருக்குப் பஞ்சமே இல்லாத ஏரியாவாக இருந்தாலும் ஒரு சில பண்ணையார்களைத் தவிர பெரும்பாலான சிறு விவசாயிகளின் நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சி இன்று இவர்கள் வாழ்வையும் அடியோடு மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. பயிர் செய்யாத புஞ்சை நிலங்கள் ஏக்கர் மூன்று லட்சம்,  நெல் மற்றும் கரும்பு வயல்கள் ஏக்கர் ஐந்து லட்சம், தென்னந்தோப்புகள் ஏக்கர் பத்து லட்சம் என கடந்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகியுள்ளனர்.
பள்ளி நண்பன் ஒருவனின் தந்தையும் ஒருகாலத்தில் சிறு விவசாயிதான். கையிலிருந்த இரண்டு ஏக்கர் நிலம், ஒரு சில ஆடு மாடுகளோடு இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைக்க மிகுந்த சிரமப் பட்டார். மூத்தவன் பள்ளி இறுதி…

ஜெயகாந்தன், நெடுமாறன், நக்கீரன், அஜீத்குமார்

Image
சில தினங்களுக்கு பதிவுலகிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று எண்ணிய வேளையில் நண்பர் செந்தில்வேலன் தமிழகத்தின் பிடித்த, பிடிக்காத தொடர்பதிவுக்கு அழைத்தது மீதமிருந்ததால் அந்தக் கடமையையும் முடித்து விடுகிறேன்.

ஒரு துறையில் ஒரே ஒருவரைத்தான் பிடிக்கும்/பிடிக்காது என்று தேர்வு செய்ய முடியவில்லை, என்வே தொடரின் விதியை மீறி சிலவற்றில் இரண்டு மூன்று என உண்டு.


1) எழுத்தாளர்கள்

பிடித்தவர் - ஜெயகாந்தன். விளிம்பு நிலை மனிதர்களைக் கண்டவுடன் எனக்கு எழுந்த வெறுப்பை கருணையாக மாற்றியது சிங்கத்தின் எழுத்துக்கள்தான். பள்ளி இறுதி மட்டும் கல்லூரி நாட்களிலேயே தீவிரமாக வாசித்திருந்தால் ஒருவேளை என் வாழ்வு தடம் மாறியிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பையும் தாண்டி இன்னமும் கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ளத்தில் இருக்கிறதென்றால் அதற்கு முழுக்காரணம் அவர்தான்.

பிடிக்காதவர் - ஜெயமோகன். என்ன காரணமென்று தெரியவில்லை, ஜெமோவின் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு. கல்லூரி நாட்களில் வாங்கிய 'சங்க சித்திரங்கள்'தான் நான் வாசித்த அவரின் ஒரே புத்தகம் ஆனால் பல முறை முயன்றும் சில பக்கங்களுக்கு மேல் புரட்ட முடியாமல் அப்படியே…

நன்றியுடன் சில நினைவுகள்

Image
இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தில் வார நாட்கள் பூனாவிலும் வார இறுதிகள் மும்பையிலும் என ஓய்வின்றிப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில்தான் இணையக் குழுமங்களின் அறிமுகம் கிட்டியது. விமான் நகர் விடுதியில் தனிமையான மாலை நேரங்களில் எனக்கிருந்த துணை சில புத்தகங்களும், மடிக்கணினியும் அதிலிருந்த இணைய இணைப்புமே.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்த கிழக்குப் பதிப்பகத்தின் 'சே குவாரா - வாழ்வும் மரணமும்' புத்தகத்தை அப்போதுதான் வாசித்து முடித்திருந்தேன். 'சே' தொடர்பாய் சில ஆவணங்களை உறுதிப் படுத்த இணையத்தில் தேடிய போது பல இணையக் குழுமங்களும் அவைகளில் உலகளாவிய மனித குலத்தின் உரிமைகள், தேடல்கள் குறித்தான விவாதங்களும் என்னைக் கவர்ந்ததால் யாஹூவின் சே குழுமத்தில் இணைந்து என்னுடைய கருத்துக்களையும் பதிப்பிக்கத் துவங்கினேன்.

தென்னமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், பாலஸ்தீனியர்கள், கொரியர்கள் என முகம் தெரியாத பல நாட்டு மனிதர்களின் உள்நாட்டு அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விவாதங்களை தினமும் விழி விரியப் பார்த்து பகிர்ந்து கொண்டிருந்த போது பல இந்தியர்களும், தமிழர்களும் இன்று பிரபலமாய் …

எதிர்காலம் எவர் கையில்?

Image
நம்மில் பலருக்கு சமூக அக்கறை இருந்தாலும், நம்மால் பங்களிக்கக் கூடிய பல நிகழ்வுகளிலும் கூட வெறும் பார்வையாளராய்தான் இருக்கிறோம். அவ்வப்போது அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்த முனைந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இன்மையால் பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு கண்டு பல நேரங்களில் பரிதாபத்தோடும் புலம்பல்களோடும் நிறுத்திக் கொள்கிறோமே தவிர ஆக்கப்பூர்வமான செயல்களில் இறங்குபவர்கள் வெகு குறைவே.

வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது நம் தமிழகத்தில் இந்த வேறுபாடு சற்று குறைவு என்றாலும் அனைவருக்கும் சம உரிமை என்ற இலக்கை அடைய இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. கான்வென்டில் படிக்கும் நம் பிள்ளைகளின் பொதி மூட்டைகளைப் பற்றிக்கூட கவலைப்படாத நாம் என்றாவது வெளி உலகத் தொடர்பே இல்லாத பல குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறோமா?

ஆனால் நம்மைப்போன்று கணினியிலேயே காலைக் கடன்களைக்கூட கழிக்கும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் மத்தியில் சில செயல் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரால் உருவாக்கப் பட்ட இயக்கம்தான் குக்கூ குழந்தைகள் வெளி. இதன் அங்கத்தினர் அனை…

தமிழ்மணம், தலைக்கறி, தனிமையின் இசை..

Image
ஹூம்.. எத்தனை முறை மருத்துவர்களை சென்று பார்த்தாலும் இந்த தூக்கத்தில் உளறும் வியாதி மட்டும் நிற்கவே மாட்டேன் என்கிறது. எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் ஒன்றையே சொல்கிறார்கள்.

"நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதீங்க. ஒரு பத்து மணிக்கே தூங்கிடுங்க. மனச எப்பவுமே ரிலாக்ஸா வச்சுக்கங்க. இதுக்கு மருந்தெல்லாம் ஒண்ணியும் கெடயாது. அப்புறம் முக்கியமா ஆபீஸ்ல தூங்காதீங்க. பகல்ல முழிச்சிருந்தா தான் நைட்டு ஒழுங்கா தூக்கம் வரும்" என்று அரதப் பழசான ஜோக்கை வேறு சொல்லி எரிச்சலூட்டுகிறார்கள்.

நாம் என்ன அரசு அலுவலகத்திலா வேலை செய்கிறோம்? மென்பொருள் துறையில் பத்து மணிக்கே தூங்குவதாவது? சரி, எப்படியாவது செயல்படுத்தலாம் என்று முயற்சித்து ஒருநாள் இரவு ஒன்பதரை மணிக்கு கண்ணயர்ந்தேன். நள்ளிரவு சரியாக ஒரு மணியளவில் மொபைல் கதறத் துவங்கியது. ச்சே, என்ன கொடுமடா இது என்று போனை எடுத்தால் டீம் மேட் அமெரிக்காவிலிருந்து அலறுகிறான்.

"மச்சான், பயங்கர சாணிடா. உன்னோட மாட்யூல் கவுந்துருச்சு. கஸ்டமர் இன்னைக்கு இங்கயே என்னப் பொதச்சுருவான்னு நெனக்கிறேன். உடனே லாகின் பண்ணுடா"

ஏன் மொபைலை அணைத்து விட்டுத் தூங்கக் கூடாத…

மணலும் நுரையும்..

Image
"ஒரு வாரம் விடுப்பு வேண்டும் தாவூத், மணிலா செல்கிறேன்" அறையினுள் நுழைந்த மேரியின் கலங்கிய கண்களை நோக்கியதுமே எனக்குள்ளும் ஏதோ கலங்கியது.


"என்ன விஷயம்?"


"என் மூத்த மகள் நேற்று இரவு கத்தியால் மணிக்கட்டை கீறிக் கொண்டாளாம். மருத்துவமனையில் இருப்பதாய் அம்மா தொலைபேசினாள்"


"அவள் கல்லூரியில் பயில்கிறாளல்லவா? என்ன காரணமென்று தெரிந்ததா?"


"காதல் தோல்வியாம்..... இப்பொழுது மூன்று மாதம் வேறு" தொடர்ந்து உரையாட இயலாமல் வார்த்தைகள் வருத்தமாய் வெளிவந்தன.


"ஓ... காதல்.." பெருமூச்சுடன் மனமின்றி அவளுக்கு விடை கொடுத்தேன்.


அறையை விட்டு அவள் அகன்றதும் ஏதோ ஒரு வெறுமை உள்ளத்தில் படர்ந்தது.


---------------


மேரிக்கு நாற்பத்தைந்து வயதுதான் ஆகிறது. என்னை விட நான்கு வயது இளையவள். நிறுவனத்தின் பல முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்தல், வாடிக்கையாளர்களுடனான என்னுடைய சந்திப்புகளைத் திட்டமிடுதல் மற்றும் மனித வள மேம்பாட்டு துறையையும் இணைத்து கவனிக்க ஒரு அனுபவமுள்ள ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன்.


பெரும்பாலும் இந்தியர்கள் இருந்த என் அலுவலகத்தில் ஏனோ இந்தப் பணிக்கும் ஒரு இந்தியரையே நி…

நடனங்கள் - வாழ்வின் கொண்டாட்டம்

Image
இசை மற்றும் நடனங்களின் தீவிர ரசிகனாயிருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இயல்பாய் உடனிருந்த கூச்ச சுபாவமும் தாழ்வு மனப்பான்மையும் ஒரு பார்வையாளன் அளவிலேயே என்னை நிறுத்தி விட்டது. ஆனால் இந்த மென்பொருள் வாழ்க்கை என் பல பழக்க வழக்கங்களைப் புரட்டிப்போட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் திருவிழாக்களில் தீர்த்தம் எடுக்கும் போது, உள்ளூர் ஜிக்காட்டக் குழுவினரின் பறையடிக்கேற்ற நடனத்திற்கு பார்வையாளர்களின் உடலும் கட்டுப்பாடிழந்து தானாய் ஆடும். அதே போன்ற ஒரு உணர்வைக் கொடுத்து என்னை ஆட வைத்தன மும்பையின் நடன விடுதிகள்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மட்டும் எந்தப் ப்ராஜெக்டில் எங்கிருந்தாலும் மாலை எட்டு மணிக்குள் கிழக்கு அந்தேரியிலுள்ள எங்கள் அலுவலக கெஸ்ட் ஹவுசில் அனைவரும் கூடி விடுவர். ஆளுக்கொரு வேலையாய் பிரித்துக் கொண்டு சைட் டிஷ் வாங்கி வர ஒரு குழுவும், சரக்கு வாங்க ஒரு குழுவும் செல்ல, வீட்டை சுத்தப் படுத்தி ஹாலில் பிட்ச் போட்டு ஒன்பது மணியளவில் ஆட்டம் துவங்கி விடும்.

ஒவ்வொருவரும் அவனவன் மேனேஜரைத் திட்டிவிட்டு நிறுவனத்தையும் மாறி மாறித் திட்ட ஆரம்பிப்பார்கள்.

"மச்சான் நம்ம கம…

சில அதிர்ச்சிகளும் பல ஆச்சரியங்களும்

Image
அடுத்த வினாடியில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் ஏராளம் என்றாலும் வாழ்க்கை எவ்வித எதிர்பார்ப்புமின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது நினைவுகளில் இளைப்பாறும் பொழுது, சற்றுப் பின் நோக்கினால் அந்த ஆச்சரியங்கள் எப்பொழுதும் மகிழ்வையும், அதிர்ச்சிகள் பல அனுபவங்களையுமே கற்றுக் கொடுத்துள்ளன.

நினைவில் தெரிந்த முதல் வியப்பு எங்கள் வீட்டுக் கோழி இடும் முட்டைகளும் அது பொரிக்கும் குஞ்சுகளும். ஒவ்வொரு முறை அது அடை காக்கும் போதும் முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சுகள் வெளிவருவதைக் காணும் ஆவலில் தினமும் மாலை பள்ளியில் இருந்து வந்து கூடையைத் திறந்து பார்ப்பேன்.

எப்போதும் என்னிடம் அன்பாக இருக்கும் தாய்க்கோழி, குஞ்சுகள் பிறந்த அன்று அனைத்தையும் தன் இறகுகளுக்குள் ஒளித்துக் கொண்டு என்னை முறைத்துப் பார்க்கும். குறைந்தது நான்கு ஐந்து நாட்கள் யாரையும் அதனிடம் நெருங்கவே விடாது.

 சில தினங்களில் அவை அனைத்தும் என் காலடியில் சுற்ற ஆரம்பித்ததும் பஞ்சு போல் மென்மையான கோழிக் குஞ்சுகளை இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்…