Tuesday, November 3, 2009

நடனங்கள் - வாழ்வின் கொண்டாட்டம்








இசை மற்றும் நடனங்களின் தீவிர ரசிகனாயிருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இயல்பாய் உடனிருந்த கூச்ச சுபாவமும் தாழ்வு மனப்பான்மையும் ஒரு பார்வையாளன் அளவிலேயே என்னை நிறுத்தி விட்டது. ஆனால் இந்த மென்பொருள் வாழ்க்கை என் பல பழக்க வழக்கங்களைப் புரட்டிப்போட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் திருவிழாக்களில் தீர்த்தம் எடுக்கும் போது, உள்ளூர் ஜிக்காட்டக் குழுவினரின் பறையடிக்கேற்ற நடனத்திற்கு பார்வையாளர்களின் உடலும் கட்டுப்பாடிழந்து தானாய் ஆடும். அதே போன்ற ஒரு உணர்வைக் கொடுத்து என்னை ஆட வைத்தன மும்பையின் நடன விடுதிகள்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மட்டும் எந்தப் ப்ராஜெக்டில் எங்கிருந்தாலும் மாலை எட்டு மணிக்குள் கிழக்கு அந்தேரியிலுள்ள எங்கள் அலுவலக கெஸ்ட் ஹவுசில் அனைவரும் கூடி விடுவர். ஆளுக்கொரு வேலையாய் பிரித்துக் கொண்டு சைட் டிஷ் வாங்கி வர ஒரு குழுவும், சரக்கு வாங்க ஒரு குழுவும் செல்ல, வீட்டை சுத்தப் படுத்தி ஹாலில் பிட்ச் போட்டு ஒன்பது மணியளவில் ஆட்டம் துவங்கி விடும்.

ஒவ்வொருவரும் அவனவன் மேனேஜரைத் திட்டிவிட்டு நிறுவனத்தையும் மாறி மாறித் திட்ட ஆரம்பிப்பார்கள்.

"மச்சான் நம்ம கம்பெனியில ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்டே சரியில்லடா, இந்த இஷ்யூவ எப்படி ஹேண்டில் பண்ணனும் தெரியுமா?" என்று மப்பில் அவனவன் கொடுக்கும் ஐடியாவை மட்டும் நிர்வாகம் கேட்டால் நிறுவனம் ஒரே நாளில் 'Fortune 100'க்குள் வந்து விடுமென்று தோன்றும்.

"சரி சரி விடுங்கடா, இவனுங்க திருந்தவே மாட்டனுக. வேற ஏதாவது பேசுங்கடா"

"இந்த டெஸ்டிங் டீம்ல இருகுக்கற ப்ரியா படுத்தறாடா, என்னால தூங்கவே முடியல"

"ஏண்டா ஏதாவது பத்திகிச்சா?"

"ஆமாண்டா, பத்திகிட்டு எரியுது. நீவேற, தினமும் ஏதாவது புதுசு புதுசா பக் கண்டு புடிச்சு என்ன வாதிக்கறாடா. ஒண்ணு மட்டும் சொல்றண்டா மச்சி, எவ்வளோ சம்பளம் வாங்குனாலும் சத்தியமா டெஸ்டிங்குல இருக்கற பொண்ண மட்டும் கட்டிக்கவே மாட்டேன்"

பேச்சு திசை மாறி எங்கெங்கோ சுற்றி விட்டு டான்ஸ் பார் போலாமாடா? என்று வந்து நிற்கும்.

அனைவரின் பேராதரவோடு பனிரெண்டு மணியளவில் ஒரு சிலர் மட்டையாகிவிட, மீதமுள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு டான்ஸ் பார் பெயரைச் சொல்ல, 6 -7 பேரை ஏற்றிக் கொண்டு இரண்டு ஆட்டோக்கள் கிளம்பும்.

பெரும்பாலானவற்றில் உள்ளே இடமின்றி பவுன்சர்களால் விரட்டியடிக்கப் பட்டு நொந்து போய் வீடு திரும்பலாமென எண்ணும்போது ஏதேனும் ஒரு மொக்கை ஃபிகர்கள் உள்ள டான்ஸ் பாரில் இடம் கிடைக்கும். வெறும் நான்கு பியர்களை மட்டும் வாங்கிக் கொண்டு, அரையிருட்டில் உச்சபட்ச ஒலியில் இந்திப் பாடல்களுக்கு நம்ம ஊர் குத்தாட்ட நடனம் ஆட ஆரம்பிப்போம். சரக்கடித்த பின்பு வெட்கமாவது கூச்சமாவது?


பவுன்சர்கள் அவ்வப்போது வந்து "ஔர் குச் சாயியே" என்று கழுத்தைப் பிடிப்பது போல் கேட்டாலும் சரி, ஃபிகர்கள் "கம்பெனி சாயியே?" என்று கேட்டாலும் சரி, எதற்கும் மசியாமல் அவை பின்னால் "தூத்தேறி" என்று துப்புவது காதில் விழுந்தாலும் ஆட்டம் நிற்காது.

அதிகாலை நான்கரை, ஐந்து மணிவரை ஆடிக் களைத்து "கடைய சாத்தறோம் கெளம்புங்கடா" என்று பவுன்சர்கள் விரட்டிய பின்னர்தான் வெளியே வருவோம்.

மாதக் கடைசியில் எவனாவது மன வருத்தத்தில் இருந்தால், ஹாலிலேயே இரண்டு மூன்று பெக்குகளுடன் ஏதேனும் குத்துப்பாடல் டிவிடியில் ஓட, எங்கள் நடனம் ஆரம்பமாகி விடும்.

ஆனால் மும்பைக்குப் பின்னர் அதே போன்று வேறு எங்கும் நடனமாடும் வாய்ப்பும் நண்பர்கள் குழுவும் ஏனோ அமையவில்லை. சில வருடங்களுக்குப் பின்னர் சிங்கையில் இருந்த போது மீண்டும் அதே போல் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஆனால் இம்முறை

"அண்ணனுக்கு ஜே..,
 காளையனுக்கு ஜே..
பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்"

என்று தமிழ்ப் பாடலை அசோகா நடன விடுதியில் கேட்டவுடன், உற்சாகம் பிய்த்துக் கொண்டு உடலும் உள்ளமும் ஆடத்துவங்கியது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அங்கு பலர் குடும்பத்துடன் வந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

எல்லாம் சரி, இப்போதெல்லாம் நம் ஊரில் பல குழந்தைகள் தொலைக்காட்சியில் குத்துப் பாடல்களைக் கேட்டவுடன் ஆட ஆரம்பித்து விடுகின்றனவாம்.

நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது புலம்பினார், அவரின்  இரண்டரை வயதுப் பெண், குழந்தைகளின் காவியமான கந்தசாமியில் வரும் "ஏம்பேரு.. மீனாகுமாரி" என்ற பாடலைக் கேட்டால் எந்த இடமாக இருப்பினும் நின்று ஆட ஆரம்பித்து விடுகிறாளாம்.

"இதுக்கெல்லாம் கவலப் படுறீங்களே, நானெல்லாம் இருபத்தஞ்சு வயசுக்குப் பின்னாடிதான ஆடவே ஆரம்பிச்சேன். உங்க பொண்ணு இப்பவே டான்ஸ்ல பின்னறாளே?"

"அதில்லைங்க, வேற ஏதாவது பாட்டா இருந்தாப் பரவாயில்லை, ஆனா அதுல வர்ற மாதிரியே ஆடுறா, அதுதான் பிரச்சினை" என்றார்.

ஹூம்.. குழந்தைகளுக்குத் தெரியுமா எது நல்லது கெட்டது என்று? இசையும் நடனமும் இணைந்து வாழ்வைக் கொண்டாடும் வயது அல்லவா அது?

இங்கே நம் ஊரில்தான் இப்படியா என்றால், இந்த சாம்பா நடன அழகியின் குஜால் ஆட்டத்தைப் பாருங்கள் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கிறதென்று.



பிஞ்சுகளே இந்த ஆட்டம் ஆடும் போது உங்களுக்கும் நடனமாட வேண்டும் போலிருக்கிறதா? கூச்சப் படாதீர்கள். வீட்டில் யாருமில்லையென்றால் கதவை மூடிவிட்டு உங்களுக்குப் பிடித்த பாடலைப் போட்டு ஆரம்பியுங்களேன். கலைகளுக்கும் கொண்டாட்டத்துக்கும் வயது ஒரு தடையா என்ன?


14 comments:

  1. நாகா.. கலக்கல் ஆட்டம் :) அந்த சிறுமியின் சம்பா நடனம்.. கலக்கலோ கலக்கல்!

    கல்லூரிக்காலங்களில் குத்தாட்டம் போட்டது நினைவு வந்துவிட்டது!

    ReplyDelete
  2. நல்ல பதிவு நாகா...அதற்கேற்ற புகைப்படம் :)

    ReplyDelete
  3. சூப்பர் டான்ஸ். சூப்பர் பதிவு. குழந்தைகள் நாம் செய்வதைதான் பின்பற்றுகிறன. நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  4. நானும் நல்லா டான்ஸ் ஆடுவேன் மச்சி!
    சரக்கடிக்காமதான்..

    ReplyDelete
  5. ஆஹா.... கலக்கல்

    ஒரு நாளைக்கு ஆடிப்பார்த்துடுவோம்

    வயது தடையில்லை.... ஆனா, வழுக்கி விழுந்துட்டா தாடை நமக்கில்லை

    ஹ ஹ ஹ

    ReplyDelete
  6. ஆகா நல்ல பதிவு நாங்க எல்லாம் வயிறு முட்ட குடிச்சுட்டு நல்லா இட்டிலி காரச்சட்னி, நெய்தோசையினு தின்னு குப்பற படுத்துருவேம், இல்லைனா வீடியேவில் படம் போட்டு காலையில் யாரு முதல எழுந்தாலும் ஆப் பண்ணுவேம். நல்ல பதிவு.
    குட்டிப் பெண்ணு டான்ஸ் அருமை.

    ReplyDelete
  7. இப்பத்தான் குட்டிபொண்ணு டான்ஸ் பார்த்தேன். அருமை! பகிர்விற்கு நன்றி நாகா

    ReplyDelete
  8. ஆகா..கொசுவத்தி சுத்திக்கிட்டு இருக்கேன் தல ;)

    ReplyDelete
  9. ஆட்டம் போட பிடிக்கும், ஊரில் ஆடியிருக்கிறேன்... ட்ரிங்க்ஸ் பழக்கம் இல்லாததால் நிறைய இழஅந்திருக்கிறேன்...அருமை நாகா. இது ஸ்டார் வாரம்..... கலக்குக்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  10. நல்ல இடுகை, நாகா!

    நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து கலக்குங்கள்!

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...