
பயப்படாதீங்க, இது S.J. சூர்யா படிச்ச பள்ளிக்கூடம் இல்ல, நான் படிச்ச அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி - உடுமலைப்பேட்டை. வெறும் அமேநி (மேனியல்ல) பள்ளியாத்தான் ஒரு காலத்துல இருந்தது. ஆனா என்னோட துரதிர்ஷ்டம் பாருங்க, நான் அங்க போயி ஆறாப்பு சேந்த உடனே புள்ளைங்களுக்குத் தனியா ஒரு அபெமேநி பள்ளிய எங்கூருல ஆரம்பிச்சுட்டாங்க. அது ஒண்ணுதான் கொற, மத்தபடி வாழ்க்கைக்கு? தேவையான எல்லா விஷயத்தயும் அங்கதான் கத்துகிட்டேன். அது சரி, அது என்ன மாதிரியான வாழ்க்கைக் கல்வின்னு பாக்கறதுக்கு முன்னாடி அஞ்சாவது வரைக்கும் என்ன கிழிச்சோம்னு பாப்போமா?
ஒழுங்கா பால்வாடிக்குப் போயி பக்கத்துல உக்காந்துட்டு இருந்த பய்யனுங்களயும் புள்ளைங்களயும் கிள்ளி வெச்சு, பொராண்டிவுட்டு வாராவாரம் குடுக்கற பல்பொடி, அப்பப்போ குடுக்கற எம்ஜியாரு செருப்புன்னு வாங்கிட்டு பயங்கர சந்தோஷமா வாழ்க்கை போயிட்டு இருந்தப்போ எங்கம்மாவுக்கு திடீருன்னு என்னய இங்கிலீசு மீடியத்துல சேக்கோணும்னு ஆச வந்துருச்சு. பால்வாடியில கூடப் படிச்சவனெல்லாம் நேரா ஒண்ணாப்பு போயிட்டானுக, ஆனா என்னய மட்டும் நாலரை வயசுல கொண்டு போயி குறிச்சிக்கோட்டை RVG ஸ்கூல்ல 'எல்கேஜி'ல சேத்து விட்டாங்க.
"பைய்யன் மாடு மாதிரி வளந்துட்டானே, மத்த கொழந்தைங்க எல்லாம் பயந்துருமே" - ஹெட் மிஸ்சு.
"அப்படின்னா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டார்டுல சேத்துக்ககோங்க" - இது எங்கப்பா.
"ம்ஹூம் ABCD தெரியாதவனெல்லாம் எல்கேஜி படிக்கத்தான் லாயக்கு"ன்னு என்னோட அப்பாவியான மூஞ்சியப் பாத்து போனாப் போகுதுன்னு லாஸ்டு பென்ச்சுல ஒரு எடத்த ஒதுக்குனாங்க. அங்கதான் உக்காந்துட்டு இருந்தான் கண்ணன்.
வூட்ல இருந்து ஸ்கூலுக்குப் போக வர பஸ்ஸுக்கு 40+40 = 80 காசு. எங்கம்மா குடுக்கற ஒர்ருபாயில மிச்சமாகுற இருவது காசுக்கு எலந்த வட, எலந்தப்பழம், மாங்கா ஊறுகாயத் தவிர வேற எதுவும் கெடைக்காது. ஆனா கண்ணனவுங்க வூட்டுல அவனுக்கு தெனமும் ரெண்டு ரூவா குடுப்பாங்க. மிச்சக் காசுக்கு அவன் தினமும் கோன் கேக், சாக்லெட்னு வாங்கித் திம்பான். அப்பிடி ஒரு நாள் எலந்த வடய தின்னுகிட்டே அவன 'பே'ன்னு பாத்தேன்.
"என்றா, உனக்கும் கோன் கேக் வேணுமா?"
"ஆமா"
"செரி, இன்னைலருந்து ஒரு நாளு நீ எனக்கு வாங்கித்தா, அடுத்த நாளு நான் உனக்கு வாங்கித் தருவேன்னு" சொன்னான். நான் இருவது காசுக்கு கை நெறயக் கெடைக்கற எலந்தப் பழத்துல பாதி அவனுக்குத் தருவேன். அவன், அவனோட அந்த ஒர்ருவாய சேத்து வெச்சு அடுத்த நாளு ரெண்டு கோன் கேக்கா வாங்கி எனக்கும் ஒண்ணு தருவான். அன்னயில இருந்து கண்ணந்தான் எனக்கு எல்லாத்துலயும் கூட்டாளி. அஞ்சாப்பு வரைக்கும் நாங்க பண்ணாத சேட்டையில்ல.
முன்னாடி இருக்கற பசங்க மேல சாக்பீஸ் வீசறது, ஜோப்புக்குள்ள நெடக்கள்ளயப் போட்டுட்டு வந்து க்ளாஸ் நடக்கும்போது திங்கறது, முன்னாடி உக்காந்துருக்குற புள்ளைகளோட ஜடையக் கட்டி வெக்கறது, மிஸ்சு அந்தப் பக்கம் திரும்பும்போது சத்தமாப் புருக்கு விடறது, ஊரு வேலில இருக்கற ஒடக்காய எல்லாம் தேடிப்போயிக் கொன்னது, நுங்கு வண்டி செஞ்சு அதுக்கு ரேஸ் வெச்சது, வாய்க்கால்ல நீச்சல் பழகறேன்னு வூட்டுக்குத் தெரியாமப் போயி, தண்ணிக்குள்ள இருந்த கண்ணாடி காலக் கிழிச்சு ரத்தம் சொட்டச் சொட்ட அழுதுட்டே வந்தது, அதப்பாத்து எங்கம்மா எங்கூடச் சேந்து அழுகாம எக்ஸ்ட்ராவா ரெண்டு மொத்து மொத்துனது, மாங்காய் அடிக்கலாம்னு நான் வீசுன கல்லு மரத்துல பட்டு கண்ணன் மண்டையிலயே விழுந்தது, இனிமே அவங்கூடச் சேருவயா? சேருவயான்ன்னு அவுங்கம்மா ரோட்டுல வெச்சு அவன அடிச்சது, அத மறந்துட்டு அடுத்த நாளே அவன் எனக்கு கோன் கேக் வாங்கிக் குடுத்தது, 'மச' பந்து வெளயாடும்போது கண்ணன் வீசுன பந்து எம்மூஞ்சியில பட்டு மூஞ்சி பன்னு மாதிரி வீங்குனது, இந்த தடவ, எங்கம்மா அவங்கூடச் சேருவையா?, சேருவையான்னு ரோட்டுல வெச்சு என்னய அடிச்சது,
அய்யய்யோ, 'பசங்க' படத்து வில்லங்களெல்லாம் சும்மா, எப்பிடித்தான் இந்தப் பைய்யன வளக்கறீங்களோன்னு ரெண்டு பேர் வீட்டுலயும் தெனமும் யாராவது புகார் சொல்லீட்டுப் போவாங்க. கண்ணன் அப்பவே பெரிய அரசியல்வாதி, ஸ்கூல்ல இருக்கற ரெண்டு மூணு மிஸ்சுங்க அவனுக்கு அக்கா, அத்தை மொறை வேணும். ஏதாவது பிரச்சினைன்னா 'அக்கா'ன்னு அன்போட கூப்புட்டு அவுங்க மனச எளக்கீருவான்.என்ன ஆட்டம் போட்டாலும் நான் நாலாவது வரைக்கும் க்ளாஸ்ல மொதல் ரேங்க் (சத்தியமா உண்மைங்க) எடுப்பேன். அதுனால, ஸ்கூல்ல நாங்க ரெண்டு பேரும் எதுக்காகவும் கவலப்பட்டதில்ல. அஞ்சாவதுல 'அவ' வந்து சேந்தப்புறம்தான், ரெண்டாவது எடத்துக்குப் போனேன், அதுக்கப்புறம் காலேஜ் முடிக்கற வரைக்கும் 'கழுதை கெட்டாக் குட்டிச் செவுருங்கற' மாதிரி மொத ரேங்க நெனச்சுக் கூட பாக்க முடியல.
அஞ்சாவது கடைசி நாளன்னைக்கி ஃபர்ஸ்ட்டு பீரியட் மிஸ்சு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாச்சு. அந்த கேப்புல எங்க எதிரி எவனோ என் சட்டையிலும் கண்ணன் சட்டையிலும் மட்டும் முதுகுல பேனா இங்கால 'X' மார்க் போட்டுருந்தான். விடுவமா நாங்க, ரெனால்ட்ஸ் 045 ரீபிளோட ஊக்க மட்டும் எடுத்துட்டு வாயில வெச்சு க்ளாசுல இருந்த எல்லாப் பயலுகளயும் தொரத்தி தொரத்தி அவங்க சட்டைல ஊதி நாறடிச்சோம். மிஸ்ஸு உள்ள நொழயறப்போ க்ளாஸே போர்க்களமா இருக்கு. கையும் களவுமாப் புடிச்சு எங்க ரெண்டு பேர மட்டும் கடைசி நாளன்ன்னைக்கும் கூட, கருணையே இல்லாம வெளில முட்டிங்கால் போட வெச்சாங்க. இப்பிடி இணைபிரியாம எல்லாரயும் மெரட்டீட்டு ரவுடிகளா இருந்த எங்களப் பிரிச்சு என்னய மட்டும் டவுன் பள்ளிக்கூடத்துல் கொண்டு போய் ஆறாவது வகுப்புல சேர்த்தாங்க. அதுதான் நீங்க மேல பார்த்த அ(ஆ)மேநி பள்ளி.
எழுத நேரமில்லாததால ஒரு சின்ன இடைவேளக்குப் பின்னாடி அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போலாமா?
ஒரு வரலாற்றுக் குறிப்பு :- இந்த வருஷம் கண்ணனோட பையன் இங்கிலீசுப் பால்வாடியான ப்ரீ-கேஜில சேந்து எல்லாப் பயலுகளயும் கிள்ளிப் பெடலெடுத்துட்டுருக்கானாம். ஹூம், புலிக்குப் பொறந்தது பூனையாவுமா என்ன?
குறிப்பு 2 :- இது ஒரு தொடர் பதிவு. எழுத அழைப்பு விடுத்து என்னுள் உறங்கிக் கொண்டிருந்த நினைவுகளை எழுப்பிய நண்பர் வினோத்துக்கும் சுந்தரராமன் சாருக்கும் நன்றிகள் பல.
கொசுவத்தி பாதிதான் எரிஞ்சிருக்கு...
ReplyDeleteமீதி எப்ப?
//மாங்காய் அடிக்கலாம்னு நான் வீசுன கல்லு மரத்துல பட்டு கண்ணன் மண்டையிலயே விழுந்தது, இனிமே அவங்கூடச் சேருவயா? சேருவயான்ன்னு அவுங்கம்மா ரோட்டுல வெச்சு அவன அடிச்சது, அத மறந்துட்டு அடுத்த நாளே அவன் எனக்கு கோன் கேக் வாங்கிக் குடுத்தது, 'மச' பந்து வெளயாடும்போது கண்ணன் வீசுன பந்து எம்மூஞ்சியில பட்டு மூஞ்சி பன்னு மாதிரி வீங்குனது, இந்த தடவ, எங்கம்மா அவங்கூடச் சேருவையா?, சேருவையான்னு ரோட்டுல வெச்சு என்னய அடிச்சது//
ReplyDeleteபடிக்கும்போதெ சத்தமா சிரிச்சு... ஆபிஸ் ஸ்டேப் ஒரு மாதிரியா என்னை பார்த்து...
பின்னீட்டீடீடீடீடீடீடீடீங்க நாகா...
முடிஞ்ச அந்த படங்களை கொஞ்சம் நம்ம ஊரு படமா போடுங்க
உங்களுக்கு ( கோயம்புத்தூர் ) குசும்பு தான் ஜாஸ்தின்னு நினைச்சேன் ... மிக நன்றாக வந்து இருக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteநாகா...
ReplyDeleteஅருமை... படித்து பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன். பள்ளி நாட்கள் தான் எத்தனை இனிமையானவை... எனது பள்ளி பருவத்தில் கிடைத்திட்ட நட்புகளை இன்னமும் தொடர்கிறேன்.... நிறைய நினைவூட்ட்டி எழுதுங்கள், மகிழ்த்துங்கள்....
பிரபாகர்...
பசங்க டாப்பூண்ணே .. நொறுக்கி விட்டுருக்கிங்க போங்க ..
ReplyDeleteநல்லா இருக்கு வழக்கமானா உங்கள் நடையில்..
ReplyDeleteசீக்கிரம் இரண்டாம் பாகம் வெளியிடுங்கள்..
வருகைக்கு நன்றி கலை, சிதம்பரம்
ReplyDeleteநன்றி கதிரண்ணே, அடுத்த பதிவுல நம்மூரு படத்தப் போட்டுரலாம்
ReplyDeleteநன்றி சுந்தரராமன் சார்,
ReplyDeleteநன்றி ப்ரபாகர்
//முன்னாடி இருக்கற பசங்க மேல சாக்பீஸ் வீசறது......'மச' பந்து வெளயாடும்போது கண்ணன் வீசுன பந்து எம்மூஞ்சியில பட்டு மூஞ்சி பன்னு மாதிரி வீங்குனது, இந்த தடவ, எங்கம்மா அவங்கூடச் சேருவையா?, சேருவையான்னு ரோட்டுல வெச்சு என்னய அடிச்சது//
ReplyDeleteசரி வேகம்.. உங்க நடை.. "ரன்" படம் மாதிரி..
//
ReplyDeleteஅஞ்சாவதுல 'அவ' வந்து சேந்தப்புறம்தான், ரெண்டாவது எடத்துக்குப் போனேன்,
//
'அவ'ங்களப் பத்தி சொல்லவே இல்லியே??
"அறியாத வயசு... புடியாத மனசு....."
கலக்கல் பதிவு நாகா.. கண்ணன கேட்டதா சொல்லுங்க..
ReplyDeleteஉங்கள் பதிவின் மூலம் நான் கற்றுக்கொள்வது அந்த படங்களின் கோர்ப்பு. என்ன பணியில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நல்ல ரசனையான நபர் என்று மட்டும் புரிகிறது. எல்லோரும் என்னிடம் எதிர்பார்க்கும் அந்த எளிமை (அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய) கை வந்த கலையாக (பொறாமையாகவும்) இருக்கிறது. அப்படியா சங்கதி. பொறந்த ஊரு ரொம்ப பக்கத்துல தான் போலிருக்கு. வாங்க வச்சுக்கிறேன்.
ReplyDeleteநட்புடன் ஜோதிஜி,
http://texlords.wordpress.com
Darn, you two make even the kids in South Park cartoon seem less mischevious. :-D
ReplyDeleteச.செந்தில்வேலன் said...
ReplyDelete//
அஞ்சாவதுல 'அவ' வந்து சேந்தப்புறம்தான், ரெண்டாவது எடத்துக்குப் போனேன்,
//
'அவ'ங்களப் பத்தி சொல்லவே இல்லியே??
'அவ'ங்க எங்கூருல இப்பொ ஒரு பிரபல டாக்டரா இருக்காங்க.....
இன்னைக்குதான் மொத மொதலா உங்க பக்கத்துக்கு வந்துருக்கேன். சூப்பரா எழுதறீங்க அப்பு. எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அதுல சுவாரசியம் குறையாம எழுதறீங்க.. சத்திய சோதனையிலருந்து, கல்லுப்பிள்ளையார், F1 வரைக்கும் எல்லாம் டாப் கன்டினியூ...
ReplyDeleteDei...naga..very nice da...
ReplyDeleteKeep writing the story till date da..every moment in the younger days is always lovable & memorable forever da..keep it up da..
Me too recollected my everlovable and funfilled school days da...expecting part 2 da..
//Jothig said...
ReplyDeleteஉங்கள் பதிவின் மூலம் நான் கற்றுக்கொள்வது அந்த படங்களின் கோர்ப்பு. //
நன்றி அண்ணே. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஜோதிஜி அண்ணே. ஆபீஸ்ல டாக்குமெண்ட் அடிக்கும்போது கிடைச்ச அனுபவம் அது..
//Joe said...
ReplyDeleteDarn, you two make even the kids in South Park cartoon seem less mischevious. :-D//
ஜோ, உங்க பையன சூதானமா பாத்துக்குங்க, எல்லா பள்ளிக்கூடத்துலயும் எங்கள மாதிரி நாலஞ்சு ரவுடிங்க இருப்பாங்க..
வருகைக்கு நன்றி புபட்டியன் அண்ணே.
ReplyDeleteThanks da Karthi. Part 2 will be released soon..
ReplyDeleteநல்ல நினைவு கூறல்!
ReplyDelete+ ஓட்டும் போட்டுட்டேன்!
ReplyDelete/மிஸ்சு அந்தப் பக்கம் திரும்பும்போது சத்தமாப் புருக்கு விடறது/
ReplyDeletesuper..