செம்ம சாணி மச்சி..:(கடந்த வாரம் முழுவதும் சரமாரியாகச் சுழன்றடித்து சாணி அள்ளியதில் தமிழ்ப் பதிவுலகில் நடந்த பல பூகம்பங்களில் பங்கெடுக்க முடியவில்லை. சரி நம் பங்குக்கு வலையுலக விஜய் மல்லையா, காக்டெயில் காண்டா மிருகம், நண்பர், பதிவர் ஜோவின் மண்டையை உடைத்து அவரைப் 'பலமுக மன்னன் ஜோ'வாக்கலாம் என்றால், அவரும் மயிரிழையில் தப்பி விட்டார். அந்த மகிழ்ச்சியிலோ என்னவோ துபாய் செல்லவிருந்த என்னையும் தண்ணியனாக்கி, அவரது காரிலேயே சென்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினார்.

'Boarding Card' போடும் இடத்தில் இருந்த ஆபீசர் ஒரு 'fresher' என்று நினைக்கிறேன், தடவு தடவு என்று தடவி பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க வைத்துக் கொன்றார்.

"Sorry Sir, some problem in the system. This is your boarding pass. You can proceed to gate number 6 after immigration"

ஆறாம் எண் கேட்டின் எதிரே இருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தேன். மூன்று இரவுகளாய் சரியான உறக்கமில்லாதலால், உடல் அசதியும் எரிச்சலுமாய் கண்கள் சற்றே அயர்ந்தன.

நீருக்குப் பதிலாக எருமை மற்றும் மாட்டுச் சாணம் நிரம்பியவொரு குளத்தில் ஏகாந்தமாய் நீந்திக் கொண்டிருந்தபோது, தூரத்தில் ஊறிக்கொண்டிருந்த இரண்டு எருமைகள் மெதுவாக என் அருகில் வந்து வளைந்த கொம்புகளால் ஓங்கி முட்டின. அச்சத்தில் வியர்த்து விறுவிறுத்து விழித்துப் பார்த்தேன்.

"இங்க இருக்காரு" என்று இரண்டு விமான நிலையப் பணியாளர்கள் என்னைத் தட்டி எழுப்பியபடியே வயர்லெஸ்ஸில் யாருக்கோ தகவல் தந்து கொண்டிருந்தனர்.

பேய் முழி முழித்து "What?" என்றேன்.

"Sir, your flight is waiting for you" என்றனர். சற்றே சுய நினைவிற்கு வந்தவுடன்தான் தெரிந்தது, நிலையத்திலிருந்த அனைத்து ஒலி பெருக்கிகளிலும் என் பெயரைப் பல மொழிகளில் நாசப்படுத்திக் கொண்டிருந்தனர்.

மெதுவாக எழுந்து 'Departure gate 6'ஐ நோக்கி நடந்தேன். சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கண்களும் என் மேலே தான். ஒரே நாளில் பிரபலமாகிவிட்ட பதிவர் போன்ற பெருமிதத்தோடு விமானத்தினுள் நுழைந்தேன். பயணிகள் அனைவரும் ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே அருகிலிருந்தவர்களிடம் என்னைப் பற்றி வசை மாரி பொழிந்து கொண்டிருந்தனர். வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே இருக்கையைத் தேடிச் சென்றால், அங்கே ஒருவர் extra பத்து திர்ஹாம்கள் கொடுத்து நான் முன்பதிவு செய்திருந்த என்னுடைய ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

"Sir, that's my seat"

"இல்ல இதுதான் உங்க சீட்" என்று நடு இருக்கையைக் காண்பித்தார். ஏற்கனவே இருந்த எரிச்சலில் மேலும் சூடானேன்.

"யோவ், என்னய்யா நெனச்சுட்டிருக்கீங்க? உங்க சீட் நம்பர் என்னன்னு சரியாப் பாருங்க" என்று போட்ட கூப்பாட்டில், மீண்டும் எல்லோரும் என்னை நோக்க ஆரம்பித்தனர்.

"Sir, the flight is already delayed by 15 minutes because of you" என்று என் புகழ் பரப்பிக்கொண்டே ஓடி வந்தாள் விமானப் பணிப்பெண்.

என்னுடைய டிக்கெட்டை வாங்கிப்பார்த்து, அந்த மனிதரிடம் எடுத்து விளக்கி மாற்றி உட்கார வைக்க மேலும் பத்து நிமிடம் செலவானது.

"வர்றதே லேட்டு, இதுல இவன் சீட்டாம்" என்று முனகியபடியே கொலைவெறியோடு என்னைப் பார்த்தார் அவர்.

தூக்கம் சுத்தமாய்த் தொலைந்து, பயணித்த நான்கு மணி நேரமும் நரகம் போலக் கழிந்தது. என்னையும் மீறிக் கண்கள் அயர்ந்த போது ஷார்ஜாவில் தரையிறங்கும் அறிவிப்போடு விமானம் குலுங்கி, வயிற்றைக் கலக்கி என்னை மீண்டும் தட்டி எழுப்பியது. சீக்கிரம் வீட்டுக்குப் போகவேண்டும் என்று எல்லோரையும் முந்திக் கொண்டு ஓடினேன்.

"இந்த அவசரத்த நேத்து நைட்டு காமிக்கலாமல்ல" என்று அருகிலிருந்தவர் மற்றொருவரிடம் சொன்னது காதில் விழுந்தது.

ஆத்திரத்தையும் மூத்திரத்தையும் அடக்கிக்கொண்டே ஓடிச்சென்று குடியேற்றச் சோதனையை முதல் ஆளாக முடித்தேன்.பின்புறம் வரிசையில் காத்துக் கொண்டிருந்த சக பயணிகள் அனைவரின் கண்களும் இப்போது பொறாமையில் மீண்டும் என் மீதே மொய்த்தன.

அருகிலிருந்த Rest Roomல் டவுன்லோட் செய்துவிட்டு என் மூட்டையை எடுக்க ஓடினேன். அந்தோ! அனைவரின் சாபமும் பலித்ததோ என்னவோ, என்னோடு மற்றொருவரின் Luggage தவிர எல்லோருடையதும் வந்தது. காலை ஐந்தரை மணியாதலால், Baggage Complaints கவுண்டரில் ஒரு பயலையும் காணவில்லை. எல்லோரும் காலைக்கடன் கழிக்கச் சென்று விட்டனர் போலும்.

உடலும் மனமும் மிகவும் சோர்ந்து போய், தலையில் கைவைத்துக் கொண்டு கவுண்டர் எதிரிலேயே தரையில் உட்கார்ந்து விட்டேன். ஏதோ போராட்டம் செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு விமான நிலைய அலுவலர் "Yalla Habibi, what happened?" என்று ஓடோடி வந்தார். அவரிடம் நிலைமையை விளக்கிக் கூற, அவர் வேறு யார் யாரையோ அழைத்து என் மூட்டையைக் கொண்டு வந்து சேர்த்தார்.

"தெய்வமே.. தெய்ய்ய்வமே.. நன்றி சொல்வேன் தெய்ய்வமே.." என்று 'நந்தா' படத்தில் 'லொடுக்கு' பாண்டி பாடுவது போல் அவருக்கு நன்றி கூறி ஷார்ஜா விமான நிலையத்தை விட்டு ஏழு மணியளவில் வெளியே வந்த போதுதான் உறைத்தது, அன்று ஞாயிற்றுக்கிழமை என்று. விதி வலியது என்பார்களே அது இதுதான் போலும். இருபது நிமிடங்களில் வீட்டிலிருக்க வேண்டிய நான், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரித்துப்போட்ட தேங்காய் நார் போல வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் நுழையும் முன்னரே அலைபேசி அலற ஆரம்பித்தது.

அலுவலகத்திலிருந்து Receptionist - "You are not coming to office today?"

"No, I'm not feeling well" என்று செல்லை அணைத்து விட்டுப் படுக்கையில் விழுந்தேன். மீண்டும் அதே சாணிக்குளம், அதே ஏகாந்தமான நீச்சல், ஆனால் எந்த எருமைகளும் இன்றி நான் மட்டும் தனியே நீந்தத் துவங்கினேன்.


Comments

 1. நண்பா,

  உங்களுக்கான எனது முதல் பின்னூட்டம்...

  உங்களின் இந்த பதிவு எதார்த்தமாய் அற்புதம்...

  மிகவும் நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...

  நிறைய எழுதுங்கள்...

  பிரபாகர்...

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி ப்ரபாகர்..

  ReplyDelete
 3. இவ்வளவு நடந்து இருக்கா..
  ரொம்ப யதார்த்தமா இருக்கு உங்கள் பயண கட்டுரை.

  ReplyDelete
 4. Marakka mudiyaatha payanam nu sollu.

  ReplyDelete
 5. வாங்க.. வாங்க.. துபாய்கு மறுபடியும்
  வரட்டி தட்ட வந்துடீங்க போல?

  //இந்த அவசரத்த நேத்து நைட்டு காமிக்கலாமல்ல//

  கொய்யால! அது நான்தான்...

  ReplyDelete
 6. // "Yalla Habibi, what happened?//

  Inta waysh tishtaghil?

  muhandis???

  ReplyDelete
 7. //என்னையும் தண்ணியனாக்கி//

  //டவுன்லோட் செய்துவிட்டு //

  வார்த்தையை புதுசு புதுசா கண்டுபிடிக்கறீங்களே

  உங்கள் கஷ்டத்தையும்
  மெலிதான நகைச்சுவையோடு
  வடித்தவிதம் அருமை நாகா

  ReplyDelete
 8. போனதும் இந்தியா இன்னும் மாறவேயில்லை. ஓரே சத்தமா, அசுத்தமா இருக்குனு பதிவு எழுதுவீங்கனு நினைச்சேன். பரவாயில்லை...

  ReplyDelete
 9. பயணங்கள் எத்தனை அற்புதமானவை.

  உங்களோட நடை ரொம்ப நல்ல இருக்கின்றது.

  தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. //இவ்வளவு நடந்து இருக்கா..
  ரொம்ப யதார்த்தமா இருக்கு உங்கள் பயண கட்டுரை.//

  நன்றி வினோத்

  ReplyDelete
 11. //Marakka mudiyaatha payanam nu sollu.//

  ஆமாண்டா, உன்ன மாதிரி ஆளுங்களப் பாத்துட்டு வந்தப்புரம் எப்பிடி மறக்க முடியும்?

  ReplyDelete
 12. //கலையரசன் said...
  வாங்க.. வாங்க.. துபாய்கு மறுபடியும்
  வரட்டி தட்ட வந்துடீங்க போல? //

  ஆமாம் கலை.. மீண்டும் அள்ள ஆரம்பிச்சாச்சு

  ReplyDelete
 13. கதிர், இவை யாவும் தமிழ்மணத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகள்.. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 14. வருகைக்கு நன்றி சிதம்பரம், ரெட்மகி..

  ReplyDelete
 15. நாகா ரொம்ப இயல்பா இருந்தது

  நீங்க தாமதமா போன போது உள்ள இருந்தவங்க உங்களை கொலை வெறியோடு பார்த்ததை நினைத்து பார்த்தேன் :-))) நானா இருந்தாலும் உங்களை அப்படி தான் பார்த்து இருப்பேன் :-)))

  ReplyDelete
 16. //கிரி said...
  நாகா ரொம்ப இயல்பா இருந்தது

  நீங்க தாமதமா போன போது உள்ள இருந்தவங்க உங்களை கொலை வெறியோடு பார்த்ததை நினைத்து பார்த்தேன் :-))) //

  கிரி, நான் என்ன வேணும்னா பண்ணேன்? கண்டிப்பா யாரா இருந்தாலும் அப்படித்தான் வெறி வரும்.. :)

  ReplyDelete
 17. நாகா வாங்க வாங்க ...வந்துவுடனே உங்களை மாட்டி விட்டுட்டேன்னு நினைச்சேன், ..ஆனா அப்படி இல்லை, நீங்க ரொம்ப நல்லாவே எழுதறீங்க ...

  ReplyDelete
 18. நாகா கலக்கீட்டீங்க..

  அந்த ரெண்டு மாடுக வந்து உரசுச்சுப் பாருங்க.. ஹாஹாஹா..

  //
  "வர்றதே லேட்டு, இதுல இவன் சீட்டாம்" என்று முனகியபடியே கொலைவெறியோடு என்னைப் பார்த்தார் அவர்
  //

  நமக்கு ஜன்னல் ஓர சீட்டுக் கிடைச்சாத் தானே காத்து வாங்க முடியும் :)) மன்னிக்கவும் இது வானூர்தியா..

  நான் உங்கள 11 மணிக்குக் கூப்பிட்டு இம்சை பண்ணீட்டனோ?

  ReplyDelete
 19. வருகைக்கு நன்றி சுந்தரராமன் சார்.. எல்லோரும் பள்ளிக்கூடத்த நெனக்க வெச்சு பீலிங்ஸ கெளப்பிட்டீங்களே..

  ReplyDelete
 20. நன்றி செந்தில்.. தூங்கியிருந்தேனென்றால், அப்படியே தூக்கி வெளியே கடலில் வீசி இருப்பார்கள் :)

  ReplyDelete
 21. என்ன தான் தாமதாமகச் சென்றாலும் தன்னுடைய இருக்கை தனக்கு வேண்டும் என்று போராடிப் பெற்ற நாகா வாழ்க!

  எருமைச் சாணி,-ன்னு பசங்களைத் திட்டிட்டே இருப்பாரு, எங்க பள்ளிக்கூட தமிழ் ஆசிரியர் செல்வராஜ். அவர் உங்க சொந்தக்காரரோ?

  ReplyDelete
 22. நல்லா சோக்கா சொன்னீங்கோ..

  ReplyDelete
 23. நல்லா சோக்கா சொன்னீங்கோ..

  //யய்யா சூரியா, ஒத்த ப்ளாக்க வெச்சுகிட்டே எனக்கு வாயில் நொர தள்ளுது.. எப்பிடிய்யா இத்தினி ப்ளாக்க மேய்க்கற? வருகைக்கு நன்றி நண்பரே..//

  ReplyDelete
 24. //என்ன தான் தாமதாமகச் சென்றாலும் தன்னுடைய இருக்கை தனக்கு வேண்டும் என்று போராடிப் பெற்ற நாகா வாழ்க!//

  நாங்க எல்லாம்... உரிமைப் போராளிங்க ஜோ!!

  ReplyDelete
 25. சாணி அள்ளுவதில் இத்தனை நாள் மூழ்கிக் கிடந்ததால் உங்களின் பக்கத்தைப் பார்க்க முடியவில்லை.

  தேர்ந்த எழுத்து நாகா தொடருங்கள்

  ReplyDelete
 26. //அய்யனார் said...
  சாணி அள்ளுவதில் இத்தனை நாள் மூழ்கிக் கிடந்ததால் உங்களின் பக்கத்தைப் பார்க்க முடியவில்லை.

  தேர்ந்த எழுத்து நாகா தொடருங்க//

  வருகைக்கு நன்றி வசிஷ்டரே..

  ReplyDelete
 27. படித்து கற்றுக் கொண்டுருப்பவன் எப்படி விமர்சிக்க முடியும்? இயல்பான ஆங்கில உரையாடலை கஷடம் என்றபோதிலும் சற்று கவனிக்கலாம் கன்னி யாக்குவதற்கு?


  ஜோதிஜி

  திருப்பூர் தேவியர் இல்லம்.

  ReplyDelete
 28. நண்பா,
  இன்றுதான் உங்க பக்கம் வருகிறேன்,உங்களின் இந்த இடுகையையும் வேறு சில இடுகைகளையும் வாசித்தேன்.மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடும் அருமையான எழுத்து நடை உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறது.வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. நல்லா கோர்வையா எழுதியிருக்கீங்க! அருமை!

  ReplyDelete
 30. அன்பின் நாகா

  அருமையான, நகைச்சுவை நிறைந்த, பயணக்குறிப்பு - ஆத்திரத்தைஅயும் ..த்திரத்தையும் ஒரு சேர அடக்குவது கடினம்- செய்திருக்கிறீர்கள் - டவுன் லோடும் செய்தாய் விட்டது. நன்று நன்று

  நல்வாழ்த்துகள் நாகா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆறோடும் மண்ணில்..!

நண்பர்கள் தேநீர் விடுதி

ஜெயகாந்தன், நெடுமாறன், நக்கீரன், அஜீத்குமார்