அண்ணா சாலையில் அம்மணமாய் - பதிவுலகம்

on Friday, July 17, 2009

மூன்று நாட்களாய் ஒருவன் அண்ணா சாலையில் அம்மணமாய் ஓடிக்கொண்டிருக்கிறான். செல்லும் வழியெல்லாம் எதிர்படுவோரின் மீது சேற்றையும் வாரி இறைக்கின்றான். அனைத்து ஊடகங்களிலும் அவனைப் பற்றித்தான் பேச்சு, ஒரே நாளில் உலகப் பிரபலமாகிறான். நோக்கம் நிறைவேறியபின்,

"நான் துணியில்லாமலா ஓடினேன்? அய்யோ எனக்குத் தெரியவில்லையே, எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்" என்று பேட்டி கொடுக்கிறான்.

அனானி, அதர் ஆப்ஷனை எடுக்கச் சொல்லி இரண்டு நாட்களாய் எல்லோரும் அவரின் இடுகைகளில் கதறுகின்றனர். இன்று காலையில் எதுவுமே தெரியாதவர் போல "நண்பர் நர்சிம்முக்கு ஒரு அவசர கடிதம்" என்று எழுதி, நீக்கி விட்டேன் என்கிறார். அனானிப் பின்னூட்டமிடும் ஆப்ஷனை மட்டும்தான் நீக்கியுள்ளார். ஆனால் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அனானிகள் எழுதிய ஆபாசப் பின்னூட்டங்கள் நீக்கப்படவில்லை. மாறாக அதே இடுகையில் அதனைக் கோடிட்டுக் காட்டுகிறார். யாரைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை, மாய்ந்து மாய்ந்து ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் இடுகை எழுதத் தெரிகிறது, அதில் விழும் பின்னூடங்களை முதல் பக்கத்திலேயே ஓட்டிவிடத் தெரிகிறது, ஆனால் அனானி பற்றித் தெரியாது என்கிறார். வலைப்பதிவுகள் எழுதுவது எத்தனை பேருக்கு சோறு போடுகிறது என்று தெரியவில்லை ஆனால் 'Cheap Publicity'யை வேண்டி சேறு இறைப்போர்தான் இங்கு மிக அதிகம்.

சக்திவேல் - நான்சென்ஸ்

10 comments:

நாகா said...
This comment has been removed by the author.
Joe said...

நீங்க ஒரு பெரிய பின்நவீனத்துவ இலக்கியவாதியா வருவீங்க போலேருக்கே? ;-)

ச.செந்தில்வேலன் said...

தங்கள் கருத்திற்கு மட்டுமல்ல, தங்கள் தளத்தில் பகிரப்படும் அனைத்து வகையான ( நல்ல கெட்ட) கருத்துகளுக்கும் தாங்களே பொறுப்பு.

"எனக்குத் தெரியாது" என்பது என்றைக்கும் ஒரு காரணமாக முடியாது. நாவினால் சுட்ட வடுவை என்ன செய்ய முடியும்?

அபுஅஃப்ஸர் said...

லூசுலே வுடுங்க தல‌

இந்த பதிவு கூட நீங்க குறிப்பிட்ட ஆளுக்கு ஒரு பப்ளிசிட்டிதான்...... இப்போ அவரு யாராயிருக்கும் என்று என் மனசு தேடி படிக்க சொல்லுது.....

சோ கூல் டவுன்...

Karthikeyan G said...

எங்க தல சக்தியின் பதிவை எதிர்த்து ஒரு பதிவா...

நாகா, இதை எழுத உங்களை தூண்டியது ஒபாமாதான் என்பதை அண்ணன் கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டார். உங்களுக்கும் ஒபாமாவிற்கும் இருக்கும் ரகசிய தொடர்பை அண்ணன் அடுத்த பதிவில் வெளியிடுவார்.

:))

தமிழ் பிரியன் said...

///Karthikeyan G said...

எங்க தல சக்தியின் பதிவை எதிர்த்து ஒரு பதிவா...

நாகா, இதை எழுத உங்களை தூண்டியது ஒபாமாதான் என்பதை அண்ணன் கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டார். உங்களுக்கும் ஒபாமாவிற்கும் இருக்கும் ரகசிய தொடர்பை அண்ணன் அடுத்த பதிவில் வெளியிடுவார்.

:)) ///

கார்த்தி உங்களது தலைவர் மீதான பக்தியைக் கண்டு மெய்சிலிர்க்குது.. ;-)

Prabhagar said...

நாகா,

பதிவுலகில் என்னை இணைத்துக்கொள்ள காரணம் நமக்கு கிடைக்கும் சுதந்திரம் மற்றும் சிறு படைப்பென்றாலும் கிடைக்கும் அங்கீகாரம்.

ஆனல் நடக்கும் கூத்தினை பார்க்கும் போது கொஞ்சமல்ல, நிறைய வேதனையாய் இருக்கிற்து.

இது போன்று அலசலை தவிர்த்து வேறு வகையில் யொசித்தால் நாம் நல்ல பத்வினை வெளியிடலாமே?

பதிவுலக நண்பரொருவர் பள்ளி நினைவுகளை கிளறச் சொன்ன அன்பு கட்டளைக்கிணங்க இதோ எழுத ஆரம்பிக்கிறேன்.

பிரபாகர்...

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

நாகா said...

ஆப்பண்ணே, யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்னுதான் பார்த்தேன். இன்னக்கி காலைல நீங்க வந்துட்டுப் போனது ரொம்ப மகிழ்ச்சிண்ணே, எங்களயும் எப்பிடியாவது பிரபலமாக்கிருங்கண்ணே. உங்களுக்கு புண்ணியமா போவும்

அது ஒரு கனாக் காலம் said...

pottu thaakku

Post a Comment