பஹ்ரைன் F1 - இரண்டாம் பாகம்

on Thursday, June 18, 2009


பஹ்ரைன் நாட்டு சிறுபான்மை மக்கள் அரசுக்கு எதிராகப் போராடும் விதம் சற்றே வித்தியாசமானது. நள்ளிரவில் அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த பகல்களில், முக்கியமான சாலைகளின் நடுவில் டயர்களை அடுக்கி தீப்பற்ற வைத்து விடுவர். பல மணி நேரங்கள் எரியும் இந்த டயர்களால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுப்புற மாசு ஏற்படுகிறது.


சனியன்றும் அப்படித்தான், முந்தைய இரவு சரக்கின் சீற்றம் தணிந்த பின் மாலை 'F1 Circuit'ஐ பார்த்து விட்டு, அருகில் இருக்கும் ஒரு கடற்கரைக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு வெளியே கிளம்பினோம். எங்கள் துரதிர்ஷ்டம், மதிய நேரம் வாகன நடமாட்டம் குறைந்த இடைவெளியில் யாரோ சிலர் அருகில் இருந்த முக்கிய சாலை ஒன்றில் டயர்களை கொளுத்தி விட்டிருந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். மெதுவாக சாலையில் ஊர்ந்து செல்லும்போதே இரண்டு நாட்களும் நாங்கள் F1ஐ பற்றி சேகரித்த சில தகவல்கள் உங்களுக்காக.

பார்வையாளர்களில் ஒரு பகுதி

எங்கள் அருகே இருந்த பார்வையாளர்கள்

FIA எனப்படும் 'Fédération Internationale de l'Automobile'னால் நிர்வகிக்கப்படும் ஃபார்முலா ஒன் உலப்போட்டிகள், 1950ம் ஆண்டு முதல் இதற்கெனத் தனியே அமைக்கப்பட்ட 'F1 Circuit' ஓடு தளங்களில் நடைபெறுகின்றன. அணிக்கு இரண்டு கார்கள் வீதம் மொத்தம் பத்து அணிகளை சேர்ந்த 20 ஓட்டுனர்கள் பங்கு பெறும் இப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறும். உலகில் மொத்தமுள்ள 38 'Circuit'களில் தேர்வு செய்யப்பட்ட 17ல் (இந்த ஆண்டு) வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு அன்று முறையே சோதனை ஓட்டம், தகுதிச் சுற்று மற்றும் இறுதிப்போட்டி என்று நடைபெறும். எங்கு, எப்போது, எத்தனை சுற்றுக்கள் என அனைத்தும் 'FIA'வால் முடிவு செய்யப்படும்.

பார்க்க மட்டுமே. ஒன்றும் சொல்வதற்கில்லை

இந்தியாவில் இது வரை 'F1 Circuit'கள் இல்லை. ஆனால் நம் 'அஜய் புல்லையா' மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முயற்சியால், வரும் 2011ம் ஆண்டு டெல்லி அருகே உள்ள 'நோய்டா'வில் தயாராகும் ஓடு தளத்தில் ஃபார்முலா ஒன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிப் பந்தயம் வரும் நவம்பர் மாதம் அமீரகத்தின் அபுதாபியில் முதன்முறையாக நடைபெற உள்ளது. பாக்கெட் வீங்கிய நண்பர்கள் யாரேனும் இங்கு இருந்தால், நேரில் கண்டு களிக்கலாம்.

விளக்குகளால் மின்னும் பேரீச்சை மரங்கள்

ஒரு வழியாக நெரிசலில் இருந்து வெளியேறி Circuit செல்லும் சாலையை பிடித்தோம். வழியெங்கும் இருந்த அனைத்து பேரீச்சை மரங்களும் வண்ண விளக்குகளால் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் அருகே தேடிப்பிடித்து ஒரு இடத்தில் காரை நிறுத்தினோம். அங்கே தற்காலிகமாக பல F1 சம்பந்தமான கடைகள் முளைத்து இருந்தன. அங்கு இருந்த பொருட்களையும் பெண்களையும் பார்வை இட்டுகொண்டே எதையும் வாங்காமல் அருகில் இருந்த 'Gulf Air' ஸ்டாலில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த F1 காருடன் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, சில மணி நேரங்களில் 'மனாமா'வில் இருந்த சங்கீதா உணவகத்தை நோக்கித் திரும்பினோம். மனாமா, பஹ்ரைன் நாட்டின் தலைநகரம்.

'Manama Fountain'

இரவு உணவை சங்கீதாவில் முடித்துக்கொண்டு அருகில் இருந்த மற்றுமொரு கடற்கரையை அடைந்தோம். மறு நாள் அலுவலக தினமாதலால், கரையில் இருந்த வெகு சிலரோடு கடலும் அமைதியாக இருந்தது. மணலில் அமர்ந்து சில மணித்துளிகள் உரையாடிக் கொண்டிருந்தோம். மறுநாள் அரை தினம் மட்டுமே விடுப்பு எடுத்திருந்த பஹ்ரைன் நண்பனின் வற்புறுத்தலால், தூரத்தில் இரவு விளக்குகளின் ஒளியில் 123 மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை அழகாக தெளித்துக் கொண்டிருந்த 'Manama Fountain'ஐ பார்த்துக்கொண்டே மெதுவாகக் கிளம்ப ஆரம்பித்தோம்.

4 comments:

என் பக்கம் said...

//பாக்கெட் வீங்கிய நண்பர்கள் யாரேனும் இங்கு இருந்தால், நேரில் கண்டு களிக்கலாம்.//

எனக்கு நாகான்னு ஒரு நன்பர் இருக்கார் கூட்டிட்டு போறாரானு கேட்டு சொல்லுங்க.........

அடுத்த பாகம் எப்போங்க.

அருமை கலக்குங்க.

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

கலையரசன் said...

//பார்வையாளர்களில் ஒரு பகுதி//
2 கார் மட்டுதான் இருக்கு பாக்கி எங்க?

//எங்கள் அருகே இருந்த பார்வையாளர்கள்//
ஹலோ பாஸூ நீங்க உள்ள போட்டோ எங்க?
யார ஏமாத்துறீங்க..?

//பார்க்க மட்டுமே. ஒன்றும் சொல்வதற்கில்லை//
ஒன்னும் சொல்ல வேண்டாம். பாட்டு பாடு!!

//இரவு உணவை சங்கீதா (கிட்ட) வில் முடித்துக்கொண்டு//
ஹோட்டலுன்னு சொல்லி யார ஏமாத்த பாக்குற?

(மேல உள்ளது சும்மா லுல்லுலாயிக்கு... மற்றபடி மனசையோ, நெஞ்சையோ, ஹார்டையோ புண்படுத்த அல்ல!!)

அருமை தொடருங்கள் பயணக்கட்டுரையை...
ஓட்டு போட்டாச்சு..

நாகா said...

நன்றி நண்பர்களே..

Post a Comment