Wednesday, June 10, 2009

இது கொலையல்ல, வதம்..!

வலைப்பதிவுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேய்ந்து கொண்டும் முகர்ந்து கொண்டும் இருந்த எனக்கு, எழுதலாம் என்ற எண்ணம் வந்தாலே ஏதோ கொலை செய்யத் தயாராவது போன்ற பயமும் படபடப்பும் ஆட்கொண்டு விடும். போதாக்குறைக்கு அடிக்கடி கனவில் வேறு கீழே உள்ள உருவம் வந்து "இது கொலையல்ல, வதம்" என்று பயமுறுத்திச் செல்லும்.



இருப்பினும் திரு. சுந்தரராமன், அய்யனார் மற்றும் அமீரக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்போடு இன்று முதல் உங்களை 'வதம்' செய்ய இந்த வலைப்பூவைத் துவங்குகிறேன். வாழ்வுப் புத்தகத்தின் 10,000 பக்கங்களுக்கு மேல் வாசித்து விட்ட நான், என் நினைவில் உள்ள சில பக்கங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கருத்துக்களையும், விமர்சனங்களையும் நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,

- நாகா

20 comments:

  1. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு :)


    வாங்க வாங்க!!!

    ReplyDelete
  2. அடிச்சு தாக்குங்க.. வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  3. வருக வருகவென அன்புடன் வரவேற்கின்றோம் :)

    ReplyDelete
  4. நன்றி வெட்டி, கிரி,சென்ஷி..

    ReplyDelete
  5. வாங்க நாகா,

    ஆரம்பமே அட்டகாசமா ஆரம்பிச்சுருக்கீங்க..


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி கண்ணா

    ReplyDelete
  7. வாங்க வந்து கலக்குங்க........

    ReplyDelete
  8. நாகா வாங்க ஆரம்பமே அட்டகாசமா இருக்கு..

    ReplyDelete
  9. அட்டாக் பண்றதுன்னு முடிவு எடுத்துட்டா,தொபுக்கடீர்ன்னு களத்தில குதிச்சிடவேண்டியதுதானே...!

    ஏன் இம்பூட்டு யோசனை !


    :))

    வாழ்த்துக்கள் வாங்க வாங்க!

    ReplyDelete
  10. நன்றி வினோத், இவன், ஆயில்யன்..

    ReplyDelete
  11. மணி ஆறு .... வருக வருக என வரவேற்கிறோம் ....

    ReplyDelete
  12. ஆரம்பிச்சிட்டான்யா... ஆரம்பிச்சிட்டான்ய்ய்யா!
    தொடருங்கள்..வாழ்த்துகள்!!
    அடிச்சு ஆடு மாமே...

    ReplyDelete
  13. அருமை

    வாழ்த்துகள் நாகா

    கலக்குங்க..........

    ReplyDelete
  14. நன்றி 'என் பக்கம்' தோழரே..

    ReplyDelete
  15. //ழுதலாம் என்ற எண்ணம் வந்தாலே ஏதோ கொலை செய்யத் தயாராவது போன்ற பயமும் படபடப்பும் ஆட்கொண்டு விடும்.//

    சூப்பரப்பு....

    ReplyDelete
  16. அருமையான முயற்சி
    அட்டகாசமான ஆரம்பம்
    வாழ்துக்கள் நாகா
    தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி ஷோபி, திருவேங்கடம்..

    ReplyDelete
  18. சூப்பர்! வாழ்த்தி வரவேற்கிறேன்!

    ReplyDelete
  19. நான் இங்க வந்துட்டுப் போனதா ஆப்புகிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிடுங்க!

    ReplyDelete
  20. அன்பின் நாகா

    ஏறத்தாழ ஆறு மாதங்கள் கழித்து, வலைப்பூவினிற்கு வந்தமைக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...