தொலைந்த இரவுகளில்..நினைவுகளால்
தனித்து
விடப்பட்டதென்
கனவு

தொலைந்த இரவுகளில்
துணையின்றித்
தேடிய
விடியலும்

அலைந்து திரிந்த
கால்களை
அணைத்துக்
கிழித்த முட்களும்

விரிந்த சிறகுகளை
முடக்கிய
வீட்டுக்
கூரையும்

உடைந்த அகத்தின்
உவகை
முகமும்

கலைந்த கூந்தலாய்
கருகிய
கால வெளியில்

கடை விரித்துக்
காத்திருக்கிறேன்
கனவுகள் -
விற்பனைக்கு

விடை இல்லை
விலைமகளா
நான் என்றால்...?

Comments

 1. //Dealz said...
  check my blog.//

  என்ன கொடும சார் இது? கஷ்டப்பட்டு கவுத எழுதுனா இப்படித்தான் கமெண்டு வருது..

  ReplyDelete
 2. ஆகா..கவிதையுமா...கலக்குங்க...

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நாகா,

  தொலைந்த இரவுகளில் இரத்தின சுருக்கமாக ஒரு பெண்ணின் வலியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

  நண்பா, உங்களுக்கு இயல்பாகவே வர்ணனைகள் சாதாரணமாக வருகிறது.

  நிறைய எழுதுங்கள். வரிக்கு வரி பாராட்டலாம் போலிருக்கிறது... ஆனாலும் மிக கவர்ந்த வரிகள்....

  "கடை விரித்துக்
  காத்திருக்கிறேன்
  கனவுகள் -
  விற்பனைக்கு"

  பிரபாகர்.

  ReplyDelete
 5. அப்படியே வார்த்தை விளையாடுது,...

  ReplyDelete
 6. நாகா,

  கலக்கல் நாகா.. அருமையா இருக்கு "தொலைந்த இரவுகளில்". நாகா கல்லடிக்கிறார் ( NAGA ROCKS :-)

  ReplyDelete
 7. விடை இல்லை
  விலைமகளா
  நான் என்றால்...?

  !!!!!!!!!!

  ReplyDelete
 8. பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை.

  சூரியனின் வௌிச்ச கதிர்கள் சற்று வித்யாசமாய் வௌிப்பட்டு இருக்கிறது.

  இலைக்கூட்டத்துக்கு கீழே இருந்து அனுபவிக்கும் போது உண்டான மனக்கிளர்ச்சி இந்த முறையும். வாழ்த்துக்கள். கண்ட புகைப்படம் தந்ததா? தந்த வார்த்தைகள் தற்போதைய சூழ்நிலையை சற்று நேரம் இளக்கி வைக்க உதவியதா?

  உங்கள் "உண்மை" கண்களுக்கு கண்ணாடி தேவையா?

  அதை விட ஆச்சரியம் உள்ளே வரும் போது கும்மியடித்துக்கொண்டுருக்கும் கூட்டம்.

  அறிவுக்கூட்டமாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள முடிகின்றது. என்னுடைய இடுகையை பார் என்று சொன்னவர் இந்த முறை ஏராளமாய் எனக்கு தந்து உதவி உள்ளார்.

  எல்லாமே இங்கு உண்டு. நாம் தான் தேடிச் செல்ல வேண்டும். இது இதை மட்டும் தான் நீங்களும் சுந்தரும் ஒவ்வொரு முறையும் எனக்கு உணர்த்தாமல் என்னை உருவாக்குகிறீர்கள்?


  தேவியர் இல்லம். திருப்பூர்.

  ReplyDelete
 9. //விரிந்த சிறகுகளை
  முடக்கிய
  வீட்டுக்
  கூரையும்//

  நாகா அற்புதமான வரிகள்

  தொடருங்கள்

  ReplyDelete
 10. நன்று நண்பா...

  பல ஆணிகளிலும், உன் கடமை என்னை வியக்கவைக்கிறது!!

  ReplyDelete
 11. //தொலைந்த இரவுகளில்
  துணையின்றித்
  தேடிய
  விடியலும்
  //

  தனித்திருக்கும் இரவுகளை பற்றிய சொல்லிய இந்த வரிகளை ரசித்தேன்

  நல்லா வந்திருக்கு

  தொடருங்க‌

  ReplyDelete
 12. ஏக்கங்களில் விடை தேடல்.. நல்லாயிருக்குங்க....

  ReplyDelete
 13. விடையே இல்ல தல ...

  ReplyDelete
 14. //உடைந்த அகத்தின்
  உவகை
  முகமும்///

  அருமையான உவமை

  ReplyDelete
 15. நண்பர் நாகா கவிதையும் நன்றாக எழுதுகிரீகள்.
  படமும் அருமை.
  ஒட்டு போட்டாச்சு

  ReplyDelete
 16. வருகைக்கும் கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. சற்றே கடுமையான பணிச்சுமை, விரிவாக நன்றி கூற முடியாமைக்கு வருந்துகிறேன்..

  ReplyDelete
 17. பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் நாகா !!

  http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

  ReplyDelete
 18. அருமையான கவிதை.

  முன்பே வோட்டளித்து விட்டேன் எனினும், மீண்டும் ஒரு முறை வாசித்து கருத்து சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

  வேலைகளை முடித்து விட்டு, விரைவில் புதிய இடுகைகள் எழுத வருவீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 19. நல்ல கவிதை நாகா.நட்சத்திர வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆறோடும் மண்ணில்..!

நண்பர்கள் தேநீர் விடுதி

ஜெயகாந்தன், நெடுமாறன், நக்கீரன், அஜீத்குமார்