கடந்த மாதம்..

on Saturday, September 5, 2009


எட்டு மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்த Projectஐ ஒரு வழியாய் முடித்து 'Sign Off' வாங்கி இரண்டு நாட்கள் முன்னர்தான் பஹ்ரைனிலிருந்து ஊர் திரும்பினேன். ஆனால் மழை விட்டும் தொடரும் தூவானம் போல இங்கு வந்த பின்னரும் ஏகப்பட்ட பிரச்சினைகள். மீண்டும் இங்கிருந்து VPN மூலம் ஒவ்வொன்றுக்கும் தீர்வு கொடுத்து மக்களை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போது என்றாகிவிட்டது.

அமெரிக்காவின் மிகப்பெரும் எக்ஸ்பிரஸ் வங்கி என்றுதான் பெயர், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் 'Regional Attitude'ஆல் இங்குள்ள வெள்ளையர்களும் சோம்பேறிகளாகி, பொறுப்புகளைத் தட்டிக்கழித்து, கிடைத்தவன் மேல் குற்றம் சாட்டி, அப்பப்பா, இந்த மென்பொருள் துறையில் பணிபுரிந்தால் இன்னும் 4-5 வருடங்களில் கிழவனாகி விடுவேனென்று எண்ணுகிறேன்.


கடந்த ஒரு மாதமாகப் பல நிகழ்வுகள், வலையுலகிலும் - வெளியுலகிலும். ஆனால் 'Cast Away Tom Hanks' போன்று ஏதோ மனித நடமாட்டமில்லாத தீவிலிருந்தது போலே என் வாழ்வும் தினமும் வெறும் 4-5 மணி நேரத் தூக்கத்துடன் Planning, Presentation, Conference, Bug Fixing என்று ஓடிக்கொண்டே இருந்ததால் வலையுலக நண்பர்கள் உட்பட பலரிடம் சரியாக உரையாட, மின்னஞ்சல் செய்ய இயலவில்லை. அவ்வாறு நான் இழந்த சில நிகழ்வுகள், நட்புகள் பற்றி ஒரு சிறு விளக்கமும், மன்னிப்பும் கீழே.


1) நண்பர் ப்ரபாகரின் வாழ்வில் மற்றுமொரு மகிழ்வான தருணம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிகழ்ந்தது. அவரை வாழ்த்தலாமென்று Meetingன் நடுவே கிடைத்த இடைவெளியில் அலைபேசியில் அழைத்தால், அது 'Switch Off' செய்யப் பட்டிருந்தது. அதன் பிறகு இன்று வரை அவரிடம் பேசும் வாய்ப்பு கிட்டவில்லை. அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதிலில்லை. ஒரு வேளை இதைப் படித்தால், என்னை மன்னியுங்கள் ப்ரபாகர்.

2) மற்றொரு பெரிய வருத்தம் - அமீரகத்தில் அண்ணாச்சி தலைமையில் நடந்த இஃப்தார் விருந்தில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்தது. நண்பர்களின் பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்த்து ஆதங்கப் படத்தான் முடிந்தது. ஆரோக்கியமான விவாதங்களுடன் தொடரும் அமீரகப் பதிவர் வலைக் குழுவில் வரும் பல இடுகைகள் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது - தொடருங்கள் நண்பர்களே.

3) நண்பர், அன்பர், பதிவர், எல்லாவற்றுக்கும் மேல் நல்ல மனிதர், 'ஜோ ஆனந்த்' வெற்றிகரமாக சதமடித்து விட்டார். அத்தோடு சரக்கையும் விட்டுவிட்டார் என்று அறிந்ததும் இன்பமும் துன்பமும் சரி சமமாய் என் உள்ளத்தில் குடிகொண்டது. நூறுக்கு வாழ்த்துக்கள் ஜோ - Life Goes On...


4) நண்பர், அண்ணன், ஈரோடு கதிர் - கடந்த ஓராண்டாக மனதைப் பிசைந்த அவரின் பல மௌனங்கள் கசிந்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாகத்தான் அவரின் வலைப்பூ நன்கு பிரபலமாகியுள்ளது. அவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதே போன்று மேலும் தரமான படைப்புகளை அண்ணன் தொடர்ந்து தர வேண்டுமென்பது என் அன்பான வேண்டுகோள்.


5) அன்பர் 'தேவியர் இல்லம், திருப்பூர்' ஜோதிஜி - வலைப்பதிவுகள் மூலம் பெற்ற வெகு சில நல்ல நண்பர்கள், மனிதர்களில் ஒருவர். இவரின் வாசிப்பனுபவமும், தேர்ந்த எழுத்து நடையும், திட்டமிட்ட வாழ்க்கை முறையும் என்னப் பல முறை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. 'அது ஒரு கனாக்காலம்' சுந்தர் அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டு, பின்னூட்டங்கள், மின்னஞ்சல்களில் தொடர்ந்த விவாதங்களால் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இடையில் பல முறை நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றபோதும் சரியாக உங்களிடம் உரையாட இயலவில்லை. இனித் தொடர்ந்து தொடர்பிலிருக்க முயல்கிறேன், நீங்கள் இன்னும் நிறைய ரகசியங்களைத் தொடருங்கள் சார்.


6) நண்பர் செந்தில்வேலன் - அரை சதம் அடித்துவிட்ட இவரிடம் விகடன் நிறுவனமே, 'முதலில் உங்கள் இடுகைகளை எங்களுக்கு அனுப்பிவிட்டு உங்கள் வலைப்பூவில் பதிவிடுங்கள்' என்று அன்புக்கட்டளை இட்டதை அறிந்து ஒரே ஊர்க்காரன், நெருங்கிய நண்பன் என்ற முறையில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். தொடரட்டும் உங்கள் வலைச் சமூக சேவை.

தொடர்ந்து பின்னூட்டங்கள் மற்றும் விமர்சனங்களால் என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இனி வாரம் ஒரு இடுகையாவது எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். பார்க்கலாம், காலம் என்ன எண்ணுகிறதென்று.

-நாகா
05/09/2009

14 comments:

கோபிநாத் said...

யப்பா...தல வந்துட்டிங்களா!!! ;))))

செம ஆப்பு போல!! ;)

கலக்குங்க ;)

பிரபாகர் said...

அன்பு நாகா,

செல் போனை அதிகமாய் உபயோகிக்க வில்லை, எனவேதான் உங்களின் வாழ்த்துக்களை பெற இயலவில்லை. சிங்கப்பூர் வந்தாயிற்று. இனி வழக்கம்போல் களத்தில் இறங்க வேண்டியது தான்...

கடுமையான வேளையின்போது சரியான உணவு, கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் ஓய்வெடுத்துக்கொள்வது என பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்...

பிரபாகர்.

கதிர் - ஈரோடு said...

மீண்டும் நாகா...

மிக்க மகிழ்ச்சி நண்பா...

//சில நேரங்களில் மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது//

இதுதான் வாழ்க்கை நண்பாகடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு இடுகைக்கும் நாகாவை எதிர்பார்த்து எதிர்பார்த்து கலைத்துபோய்விட்டேன். இபோது மகிழ்ச்சி

சுட்டியமைக்கு நன்றி

பிரபாகர் இந்தியா வந்த தகவல் அறிந்தும் என்னால் அவரிடம் பேச முடியாமல் போய்விட்டது...
வாழ்த்துகள் பிரபா

விகடனின் செல்லப்பிள்ளை செந்திலுக்கு வாழ்த்துகள்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நன்றி நாகா. நேரம் கிடைக்கும் பொழுது பதிவெழுதினாலே போதுமானது தான். நமக்கு சோறு போடறது நம் பணியே அன்று பதிவுலகம் அல்ல :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

அருமை நண்பர் நாகா நலம் தானே?
வெல்கம் பேக்...
தொடர்ந்து எழுதவும்

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

நம்மை வந்து ஆண்டவர்கள் கூட கடுகு நாட்டை வைத்துக்கொண்டு இங்குள்ள அத்தனை காரத்தையும் உறிஞ்சி இன்று உன்னத நிலமையை அடைந்தவர்கள் தான். சுல்தான் ராஜ்யத்தில் சுண்டைக்காயாக உள்ளே நுழைந்து நீங்களும் அமீரக நண்பர்களும் இணைப்பு இல்லாத சேவை மூலம் உலகத்தையே இணைத்துக்கொண்டுருப்பது எனக்கு பெரிதான ஆச்சரியம் இல்லை.

காரணம் நீங்கள் அன்று அங்கிருந்தபடியே பதிந்து தந்த கூகுள் குரோம் மட்டும் இல்லாவிட்டால் அவஸ்த்தைகளுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கும் எனக்கு உங்களுடைய பாராட்டு கிடைத்துருக்குமா?


நீங்கள் நிகழ்காலத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்துருப்பதால் தான் என்னவோ இன்று நிதர்சனமான இடத்தை அடைந்துள்ளீர்கள்.


நிச்சயம் அடைவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்து கொண்டுருக்கிறோம்?


ராமபிரான் இந்த ஆஞ்சனேயரை லஷமணனுக்கு அறிமுகப்படுத்திய செய்தி இன்று தான் எனக்குத் தெரிந்தது.

ராம தூத க்ரூபா சிந்தோ மத் கார்யம்?


அதிகாரம் வர்க்கம் மட்டும் இந்தியாவில் சரியாக இருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களும் சோம்பேறிகளுக்கா வேலை செய்து கொண்டுருப்பீர்கள்.


என்ன செய்வது வேறு வழியே இல்லாமல் பிரிட்டன் கிழட்டுச்சிங்கம் சொன்ன "சபிப்பார்கள்" என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது.


அறிமுகபடுத்தியதை விட ஆளுமைக்குள் வந்த வார்த்தைகள் சின்ன வைரமுத்துவை பொன்னும் மணியால் பூட்டி பாராட்ட தோன்றுகிறது.


விடுபட்டவை மின் அஞ்சலில்?

http://texlords.wordpress.com

texlords@aol.in

DEVIYAR ILLAM. TIRUPPUR

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு இடுகைக்கும் நாகாவை எதிர்பார்த்து எதிர்பார்த்து கலைத்துபோய்விட்டேன். இபோது மகிழ்ச்சி

கலையரசன் said...

வா மச்சி! எப்ப வந்த? சந்தோஷம்... போன காரியத்தை வெற்றிகரமாக முடிச்சிட்டீயே!!

நீ இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது கொஞ்சம் வருத்தம்தான். இனிவரும் ஒன்றுகூடலில் நிச்சயம் நீ பங்கு பெறுவாய் என்ற நம்பிக்கையுடன்...

நாகா said...

வருகைக்கு நன்றி கோபி..

நாகா said...

விரிவாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் ப்ரபாகர்.. இன்னும் வேலை விட்டபாடில்லை

நாகா said...

வருகைக்கு நன்றி கதிர், செந்தில், கார்த்திகேயன்..

நாகா said...

ஜோதி சார், விரிவான கருத்துக்கும் மின்னஞ்சலுக்கும் நன்றி..

நாகா said...

@கலை - நிச்சயம் அடுத்த ஒன்றுகூடலில் சந்திப்போம்..

Post a Comment