
கடந்த வாரம் ஒரு நாள் காலை வீட்டில் அவசரத்தில் குதறிய இரண்டு தோசைகளுடன் மதிய உணவை மறந்து அலுவலகத்தில் பொட்டி தட்டிக் கொண்டிருந்தேன். மூன்று மணியளவில் லேசாகக் கிள்ள ஆரம்பித்த பசி நான்கு - ஐந்து மணியளவில் வயிற்றில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு வீடு வந்த போது மணி ஆறு.
குப்பை உணவு (Junk Food) தின்று நீண்ட நாட்களாகி விட்டபடியால் அருகிலிருந்த KFC (Kentaucky Fried Chicken)க்கு வெளியே காத்திருக்க ஆரம்பித்தேன் (நோன்பு காலமாகையால் இங்கு ஆறரை மணிக்கு முன்பு எந்தக் கடையும் திறக்க மாட்டார்கள்). சிறிது நேரத்தில் என்னோடு பத்து பதினைந்து பிலிப்பைன்ஸ் நாட்டவரும் இணைந்து கொண்டனர். 'Tagalog'ல் ஏதோ பேசிக் கொண்டிருந்த அவர்கள், கடை திறந்ததும் 'ஓ' வென மகிழ்ச்சியில் பெரும் கூச்சல் எழுப்பிக் கொண்டு உள்ளே நுழைந்து வரிசையில் முன்பு நின்று கொண்டனர்.
கடும் பசியில் முதலில் வந்து கடைசியில் வரிசையில் நின்ற போது ஏனோ எங்கள் பள்ளியில் புதன்கிழமை முட்டையுடன் போடும் சத்துணவுக்காக வரிசையில் அடித்துப் பிடித்து நின்றதெல்லாம் நினைவில் வந்து தொலைத்தது.
ஒரு வழியாக என் முறை வந்த போது அங்கிருந்த 'Finger Lickin' ஐட்டங்களில் ஒன்றான 'Zinger Meal'ஐ உள்ளே தள்ளிய பின்தான் சற்று உயிர் வந்தது.
என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் 'Junk Food'ன் ருசியே தனிதான். அதனால்தானோ என்னவோ குழந்தைகளுக்கு இவற்றின் மேல் அலாதிப் பிரியம் போலும்.
சரி சரித்திரத்துக்கு வருவோம். KFC நம்ம லாலேட்டன் போல் அமெரிக்க ராணுவத்தில் கர்னலாக இருந்த திரு 'ஹார்லேண்ட் சாண்டர்ஸ்' என்பவரால் தொடங்கப்பட்டு இன்று உலகமெங்கும் கிளை பரப்பி நிற்கிறது.
இந்த கையை நக்க வைக்கும் (Finger Lickin) வறுகோழி, பதினொரு மூலிகைகள் மற்றும் பல மசாலாக்களின் கலவையால் செய்யப்பட்டது (அப்படித்தான் சொல்றாங்கோ).
இதன் செய்முறை, அந்த மசாலாக்களின் அளவு, பதினொரு மூலிகைகளின் பெயர் ஆகியவைதான் KFCன் வியாபார ரகசியம்.
அந்த விபரங்கள் பென்சிலால் ஒரு பேப்பரில் எழுதி சாண்டர்ஸால் கையொப்பம் இடப்பட்டு, சிறு குப்பிகளில் அடைக்கப் பட்ட அந்த பதினொரு மூலிகைகளுடன் ஒரு ரகசிய கேபினெட்டில் கணினிப் பூட்டால்(Computerized Lock) பூட்டி வைத்திருக்கிறார்கள்.
அதன் கடவுச்சொல்KFCல் உள்ள இருவரிடம் மட்டும்தான் இருக்கும், பாதி வார்த்தை ஒருவரிடம் மீதி வார்த்தை மற்றொருவரிடம். ஆனால் அந்த இருவர் யாரென்ற விபரம் வெளியாள் ஒருவருக்கும் தெரியாது.
இதெல்லாம் உங்களுக்கு நக்கலாத் தெரிஞ்சா, விக்கிபீடியாலயே போய் இங்க சரி பாத்துக்கோங்க.
எல்லாம் சரி, இந்த ராணுவ ரகசியமெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா? கென்டகி வறுகோழியைப் புசித்து விட்டு கடையில் வெட்டியாக அமர்ந்து அரட்டையடிக்க கூச்சமாக இருந்த யாரோ ஒருவரின் Creativityயை நேற்று பார்த்தேன் அதனால்தான். நீங்களும் வீட்டில் சிக்கன் தின்று விட்டு சும்மா இருந்தால் கீழே உள்ள தலைவர்களை செய்து பாருங்களேன்.
வீர தளபதி
இளைய தளபதி
புரட்சி தளபதி
சின்ன தளபதி
அசத்தலா இருக்கு
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
கொக்கரக்கோ கும்மாங்கோ!!!!!!
தலைவா,
ReplyDeleteவாரத்துக்கு ஒரு தடவ போயி சாப்பிட்டுட்டு இருக்கோம், இது மாதிரி யோசிச்சதில்லையே! கலக்கலாய் இருக்கிறது.
பிரபாகர்.
மிக அருமையான பதிவு நண்பரே.....
ReplyDeleteசூப்பர் நாகா...
ReplyDeleteசரி இந்த தாடிக்கார தாத்தா எத்தன கோழியோட எலும்பை ஒடைச்சிருபாரு
அதுதான் ஒருத்தன் அவருக்கே தோல உரிச்சிட்டான்
இஃகிஃகி
இந்த மசாலா மிக்ஸ் உலகத்தில் உள்ள பல கிளைகளுக்கு லூசிவில்லியிலிருந்து தான் அனுப்புறாங்களாமே உண்மையா பாஸ்?
ReplyDeleteஎது எப்படியோ.. பிடிக்குதோ, பிடிக்கலையோ KFC திங்கறது இப்ப fashion ஆகி போச்சி!
அருமையாக இருக்கிறது.
ReplyDeleteKFC: Killer - F***in Chicken ???
ReplyDeleteகலக்கல் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தலைவா..
ReplyDeleteவாழ்வியல் அனுபவங்கள் என்பது அதற்குள் வாழும் போது வரிசையாக யோசிக்கும் போது தான் மனதிற்குள் இருக்கும் மனோ நோயா? இல்லை பதிவுக்கான பகிர்வுச் சமாச்சாரமா? என்று தெரியும்.
ReplyDeleteகாரணம் இந்த படங்கள் எப்போது போல உள்ளே வந்த போது மனதில் எந்த எண்ணங்களும் உருவாக வில்லை. ஆனால் உங்கள் பதிவு பார்த்து மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். இதற்குப்பிறகு இத்தனை விஷயங்களா?
எண்ணங்களை மூச்சாக சுவாசித்துக்கொண்டுருப்பவனுக்கும் மூச்சை நிறுத்திவிடும் என்று தெரிந்தாலும் உலகம் முழுக்க சக்கைப் போடு போட்டுக்கொண்டுருக்கும் இந்தமாதிரி சமாச்சாரங்கள் இது வரையில் உண்ணும் வாய்ப்பு அமையவில்லை. வாயில் வைத்து இருக்கும் சுவை வைத்து இங்கிருந்தே உணர்கிறேன். பெருமூச்ச்ச்ச்சு.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்னு சொல்லுவாங்க...அதுபோல மீந்துபோன எலும்பும் அந்த தாத்தாவுக்கு உயிர் குடுக்க உதவியிருக்கு...
ReplyDeleteநல்ல ரசனை....
வாங்க உலவு, நன்றி ப்ரபாகர்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஊடகன். வாங்க கதிர் - ஹாஹாஹா..
ReplyDeleteஆமாம் கலை. வாங்க புலிகேசி, மகேஷ் வினோத்
ReplyDeleteகவலைப் படாதீங்க ஜோதிஜி, கூடிய விரைவில் திருப்பூரில் கிளை வந்தாலும் வரலாம்..
ReplyDeleteவருகைக்கு நன்றி பாலாஜி..
ReplyDeleteஅருமை நண்பர் நாகா,
ReplyDeleteநல்லா kfc ல சாப்பிட்டு அதை பத்தி நல்லாவும் எழுதிட்டீங்க.எலும்பை வைத்து ஓவியமும் வரைந்துவிட்டீர்கள்.அருமை. நல்ல முயற்சி.
super post !!!!!. I mean real creativity
ReplyDeleteலாலேட்டன், சத்துணவுனு நிறைய நகைச்சுவை க்ரிஸ்ப்பிகளைத் தூவி கருத்த சொல்லீட்டீங்க, நம்ம அசத்த போவது யாரு மதுரை முத்து மாதிரி :)
ReplyDeleteசூப்பர் கலைய் :-)
ReplyDeleteவாங்க கார்த்திகேயன், நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி சுந்தர் சார், செந்தில், சென்ஷி
ReplyDeleteகுழந்தைகளின் சொர்க்கபூமி இந்த பாலாய்போன KFC
ReplyDelete(கெண்டகி சிக்கன் போலவே) சுவையான பதிவு
ReplyDelete