என்ன மனிதர்கள் இவர்கள்?

on Thursday, October 15, 2009
2001ம் ஆண்டு ஜூன் முப்பதாம் நாள் நள்ளிரவு அந்த சம்பவம் நடந்ததை அறிந்த எங்கள் வீடே ஏதோ இழவு வீடு போலிருந்தது. செய்தியைக் கேட்டவுடனும் அதைப் பார்த்த கணத்திலிருந்தும் அப்பா யாரிடமும் பேசவில்லை, அம்மாவின் கண்களில் தொடர்ந்து கண்ணீர், எனக்கோ உள்ளத்தில் ஒரு இனம் புரியாத வலி. ஏனோ அவரை நாங்கள் வேற்று மனிதராகப் பார்த்ததே இல்லை. அவரின் வெற்றிகள், தோல்விகள், வலிகள், வேதனைகள் எல்லாம் எங்களுக்கே நிகழ்வது போன்றே எண்ணி அவர் மேல் மதிப்பு வைத்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்புதான் இறந்திருந்த என் தாத்தாவுக்கும் அவருக்கும் ஒரே வயது.


அவமானத்தால் கூனிக் குறுகியிருந்த நாங்கள், மறுநாள் காலையில் சிறை வாசலில் அவர் அமர்ந்ததைக் கண்டதும் மேலும் உடைந்து போனோம். என்ன மனிதர்கள் இவர்கள்? மனிதாபிமானமே இல்லையா? காலம் இவர்களுக்கு நிச்சயம் பதில் சொல்லும் என்று நான் காண்போரிடமெல்லாம் குமுறிக் கொண்டிருந்தேன்.


ஆனால் அதே காலம் கடந்த சில ஆண்டுகளாய் வேறு விதமாய் பதில் சொல்லியது. அவரின் சுயமரியாதையையும், மொழிப்பற்றையும் ஆளுமையையும் எப்போதுமே சிலாகித்துக் கொண்டிருந்த நாங்கள், அவரின் கோழைத்தனத்தையும் சுயநலத்தையும் தினம் தினம் பார்க்கும்போதும் படிக்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கித்தான் போனோம். எந்த மொழியை, மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துகிறாரோ, அவர்கள் இன்று முட்கம்பிகளின் பின்னால் கையேந்தும் அவலத்தையும் கண்டு மனமிரங்காமல் இழவு வீட்டில் விருதும் விருந்தும் கொடுத்து, எடுத்துக் கொண்டாடுகிறார். கொன்று குவித்த அரக்கனுக்குப் பொன்னாடை வேறு.


எந்தவொரு நாட்டவன் அல்லது மாநிலத்தவனிடம் அளவளாவும் போதும் என் இனத்தின் பெருமைகளை மாய்ந்து மாய்ந்து சொல்வதில் எனக்கு அவ்வளவு ஆனந்தம். ஆனால், இனிப் பெருமை பேச என்ன இருக்கிறது? இப்போதெல்லாம் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறேன் விடையேதுமின்றி.


ஹூம், அவ்வப்போது விழித்துக் கொள்ளும் மிருகம் வினவுகிறது - அன்றே ஏதேனும் அவருக்கு நடந்திருக்கக் கூடாதா என்று. ச்சீ, என்ன மனிதர்கள் இவர்கள்?

22 comments:

ஈரோட்டுக் கண்ணாடி said...

அருமையான பதிவு! சராசரி தமிழனின் மனநிலை இதுதான்.

கதிர் - ஈரோடு said...

//இழவு வீட்டில் விருதும் விருந்தும் கொடுத்து, எடுத்துக் கொண்டாடுகிறார். கொன்று குவித்த அரக்கனுக்குப் பொன்னாடை வேறு.//

இதையும் செய்திகளில் பார்த்து, சகித்து....

ச்சீ.... என்ன பொழப்பு பொழைக்கிறோமோ

சென்ஷி said...

:-(

ஒன்றும் சொல்லத் தோணவில்லை நண்பா..!

வானம்பாடிகள் said...

இனிமே. இங்க வாடா. நீ தமிழந்தானேன்னு கேட்டு ரெண்டு அறை விடுவானுங்க. கூசிப்போகுது.

அகல் விளக்கு said...

கனக்கும் துக்கத்திற்கு இடம்விட்டு...
மனது வெறுமையடைகிறது நண்பா.

அபுஅஃப்ஸர் said...

இரும்பு தடியால் பிடரி மண்டையில் அடித்தார் போல் ஒரு பதிவு

Rads said...

நாம் அனைவரும் தானே இதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

தங்களின் ஆதங்கம் புரிகிறது.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நாகா.. எல்லாத்தையும் பார்க்க வேண்டிய சூழலில் ஆறு கோடி ம(மா)க்கள் :(

நல்ல பதிவு!!

nigdyn said...

ilangathir
Naangal enna dhaan seyaa(seidhu irukka) mudiyum sollungalen!!!

idhu ennudaya alugai!!!

thayavu seidhu padhil sollungal!!!

ennaal kolayaaga irukka mudiya villai

satheshpandian said...

நானும் ஒரு காலத்துல இப்படி ஒரு நல்ல தலைவரான்னு வியந்தேன். இப்ப தான் அப்படி நினைச்சதுக்கு ரொம்ப வருத்தபடுகிறேன். இந்த ஈன பிறவி என்றைக்கு சாகும் என்று எதிர் பார்க்கும் ஒரு சராசரி தமிழனாக இருக்கிறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

பேரை சொல்லவே கூசுது என்று தான் எங்கயுமே போடலியா?போன மாசமே போய் சேட்டனுங்க இலங்கைக்கு ஆதரவு வாக்களித்துவிட்டு வந்ததுக்கு குமுறினோம்.

தமிழன் செய்த இந்த செயலுக்கு என்ன செய்யபோறோம்?


தமிழினத்தலைவர் என்று ஒரு பட்டம் வேற..கொடுமைடாசாமீ

வினோத்கெளதம் said...

:(

வெத்து வேட்டு said...

i think the ferry that would run between Mannar and Rameswaram would be owned by TR Balu,
the Cement factory would be owned by MK-Kanimozhi and Co
all other businesses in Srilanka specially North and East would be owned by Big Sharks from Tamil nadu....
this is what is going to happen...and soon an indian monitoring team will be installed in tamil area....

vanathy said...

தமிழக மக்களின் மன நிலையைத் தெரியப் படுத்தினீர்கள் ,நன்றி .பத்து எம்பிக்களும் போனதில் தவறில்லை ,உண்மையிலேயே ஈழத்தமிழரின் உரிமை பற்றியும் முகாம்களில் இருக்கும் மக்களை விடுவிக்கவும் இலங்கை அரசிடம் பேசுவதில் தவறில்லை.எதிரி நாடுகளும்பேசுவார்கள் , எதிரெதிரான புரட்சிக் குழுக்களும் அரசுகளும் பேசியுள்ளார்கள்,ஆனால் கனிமொழி போன்றவர்கள் ஏதோ ஜாலியான சினிமா பார்த்த மாதிரி கொள்ளைச்சிரிப்போடு மஹிந்த ,கோதபாய ராஜபக்செக்களோடு சேர்ந்து போட்டோ எடுத்தது எங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது formality ஆக போட்டோ எடுத்திருக்கலாம், ஆனால் ராஜதந்திரிகள் இன்னொரு நாட்டவரோடு பேசும்போது முகபாவம் வேறுவிதமாக இருக்கும்.

இதைவிட மோசம் ராஜபக்சாவிற்கு பொன்னாடை போர்த்தது,தமிழ் மரபின்படி ஒருவரின் சேவையையோ திறமையையோ பாராட்டிக் கெளரவம் செய்யத்தானே பொன்னாடை போர்ப்பார்கள் ,ராஜபக்சேவிற்கு இவர்கள் பொன்னாடை போர்த்துவது ஒரு பிழையான செய்தியை உலக்குக்கு தெரியப்படுத்துகிறது,அதுவும் மனித உரிமை அமைப்புக்கள் ராஜபக்சேவையும் இலங்கை அரசையும் கடுமையாகக் கண்டிக்கும் இந்த நேரத்தில் இவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்கள்.
நாம் முன்பு நாராயணன் சிவசங்கர் மேனர்களைத் திட்டினோம் ,அவர்கள் கூடக் கை குலுக்கினார்களே தவிர பொன்னாடை போர்க்கவில்லை ,அவர்களை விட இவர்கள் ஒரு படி மேலே போய் விட்டார்கள். இது பிழையான ஒரு செய்தியை உலகுக்கு சொல்கிறது .முதலில் தமிழர்கள் தம்மை சுயசோதனை செய்யவேண்டும் .
ஈழத்தமிழரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகும் டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, ஆனந்தசங்கரீ போன்றவர்கள் கூட இதுவரை ராஜபக்சாவுக்கு பொன்னாடை போர்த்தவில்லை. ஒருவேளை இவர்களைப் பார்த்து அவர்கள் தொடங்கக் கூடும் .
மொத்தத்தில் தமிழர்களை கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சரியாகத்தான் சொல்லி உள்ளார்.

-வானதி

பிரபாகர் said...

நாகா...

குழந்தைகள் ஊரிலிருந்து வந்ததால் கொஞ்சம் பிசியாயிருந்தேன், உங்களின் உள்ளக்குமுறலை சிறிது தாமதமாய் இப்போதுதான் படித்தேன். ஏற்கனவே கதிர் மற்றும் வானம்பாடிகள் அய்யாவை படித்து கொதிப்பாய் இருந்தேன்... இப்போது இன்னும் கொதிப்பாய்... நல்ல இடுகை நாகா...

பிரபாகர்...

நாகா said...

உள்ளக் கொதிப்பையும் குமுறலையும் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்தக் கோமாளி இனத்தில் பிறந்து கையறு நிலையில் இடுகை மட்டுமே இட முடிகிறது..

என் பக்கம் said...

//இந்தக் கோமாளி இனத்தில் பிறந்து கையறு நிலையில் இடுகை மட்டுமே இட முடிகிறது.//

இதுதான் நிஜம் நாகா

வால்பையன் said...

சந்தேகமில்லாமல்!

நிகழ்காலத்தில்... said...

அரசியல்வாதிகளை தமிழனாக முன்னிறுத்தி எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் :((

Joe said...

அருமையான இடுகை நண்பா!

//
ஹூம், அவ்வப்போது விழித்துக் கொள்ளும் மிருகம் வினவுகிறது - அன்றே ஏதேனும் அவருக்கு நடந்திருக்கக் கூடாதா என்று. ச்சீ, என்ன மனிதர்கள் இவர்கள்?
//

நீங்க வேற, நல்ல மனுஷங்க தான் சீக்கிரம் சாவாங்க இந்த உலகத்தில. அவரு இன்னும் பல வருஷம் இருந்து, கொள்ளுப்பேரனுக்கும் சொத்து சேர்த்து வைச்சிட்டு தான் சாவாரு!

கி.க.மகேஷ் said...

நல்ல சிந்தனை!

Paagarkai said...

நானும் பல இடுகைகளை படிப்பதன் மூலம் தமிழனின் வெறுப்பு இவர் மேல் தான் உள்ளது என்பதை உணர்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு இடை தேர்தலிலும் அபார வெற்றி பெறுகிறார். இங்கு இடுகை மற்றும் கருத்துரை இடும் தமிழ்நாட்டு தமிழர்கள் தயவுசெய்து தேர்தல் நாள் அன்று சோம்பேறித்தனம் பார்க்காமல் ஓட்டு சாவடி சென்று இவருக்கு எதிராக ஓட்டு அளிக்கவும். இல்லையேல் வாக்குசாவடியில் உள்ள அரசு ஊழியர் இவருக்காக பொத்தானை எத்தனை முறையேனும் அழுத்த தயங்க மாட்டார்.

Post a Comment