ஆப்பரசன் அளித்த அவார்டு...!உடன்பிறப்பே,

விருதுகள் எமக்கொன்றும் புதிதல்ல. பத்து வயதில் கலைமாமணி, பிலிம்பேர், ஆஸ்கர். இருபது வயதில் கோல்டன் குளோப், பத்மஸ்ரீ, பதம பூஷன். முப்பது வயதில் பாரத ரத்னா, நோபல் என்று உலகமே எம்மைக் கொண்டாடினாலும் இன்று அமீரக ஆப்பரசன், எம் அன்பன் கலையரசனின் 'சுவாரஸிய பதிவர் விருதை'ப் பெற்றதும் உள்ளம் உவகையுற்றது, நெஞ்சம் நெகிழ்ந்தது, இதயம் இனித்தது, ஆமாம், கண்களும் கூடப் பனித்தது.

அவர் சொன்னார், எம் தமிழின் வீச்சும் வீரியமும் ஆச்சரியப்படுத்துகிறது என்று. அவருக்கு யாம் வருத்தத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எம் தமிழின் வீரியத்துக்கு இதுவரை எந்த ஒரு ஓவியமும் மயங்கவில்லை, மடங்கவில்லை, மடியவுமில்லை.

எம் தமிழ் தந்தையின் மண்ணிலிருந்து சகோதரர் கதிரும் அதே விருதை எமக்களித்து எம்மை மகிழ்வித்துள்ளார். உடன், மேலும் பல உடன்பிறப்புகளுக்கு இவ்விருதைப் பகிருமாறு அன்புக்கட்டளையும் இட்டுள்ளார். அந்தோ, எம் கழகக் கண்மணிகள் பலரும் இவ்விருதை எமக்கு முன்பே பெற்று விட்டதாலும், விருதுக்கு எண்ணிக்கை ஒரு தடையல்ல என எண்ணியதாலும் எம் திருக்கரத்தால் கீழ்கண்ட கண்மணிகளுக்குப் பரிந்துரைக்கிறேன்.

1. ச. செந்தில்வேலன் - தமிழுக்கு எதற்கு அறிமுகம்?

2. ப்ரபாகர் - கழகத்தின் புதுவரவு என்றாலும் தேர்ந்த அனுபவமும் எழுத்துமாய் எமக்குப் பெரும் ஊக்கமளிப்பவர்

3. கார்த்திகேயன் - 'தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்' கண்மணி கார்த்திகேயனின் அறிவுத்தேடலை வாசித்தால் உங்களுக்கு மேலுள்ள வரிகளின் அர்த்தம் விளங்கும்.

4. என் பக்கம் ப்ரதீப் - கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், அன்பும் பண்பும் அறிவும் ஒருங்கே இணைந்த பிரச்சார பீரங்கி

எனவே,

தமிழர்களே தமிழர்களே, கல்லைக் கட்டி என்னைக் கடலில் வீசினாலும் மூழ்க மாட்டேன், உல்லாசப் படகாய் மாறி வந்து உங்களை உற்சாகப் படுத்துவேன் என்று கூறிக்கொண்டு இன்று கடையை மூடுகிறேன்.

"வாழ்க அண்ணா நாமம் போடுக மக்களுக்குப் பட்டை நாமம்."


என்றும் அன்பன்,
-நாகா
சூலை 21, 2009


தமிழ் குறிப்பு :- விருது - அவார்டு, ஓவியம் - ஃபிகர், உடன்பிறப்பு - பிரதர், எமக்கு - எனக்கு, யாம் - நாம், எம் - என்

வெறும் குறிப்பு :- புகைப்படங்கள் பலருக்கு பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தும். மேலுள்ள புகைப்படத்துக்கும், அதன் பின்னால் நின்று நகைப்பவருக்கும், இந்த இடுகைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறேன்..


Comments

 1. //இந்த இடுகைக்கும் மேலுள்ள புகைப்படத்தில் விருது கொடுக்கும் வைபவத்துக்கும், பின்னால் நின்று நகைப்பவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை..//

  :)

  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் !

  ReplyDelete
 2. விருது பெற்றமைக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. விருது அளிப்பதிலேயே இவ்வளவு சிக்கனம் என்றால் பண விசயத்தில்? நல்ல பழக்கம்!!
  வாழ்க்கையில் முன்னேற்றம்தான் உங்களுக்கு!!

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி கோவியாரே..

  ReplyDelete
 5. //தேவன் மாயம் said...
  விருது அளிப்பதிலேயே இவ்வளவு சிக்கனம் என்றால் பண விசயத்தில்? நல்ல பழக்கம்!!//

  உண்மையில் நானொரு ஊதாரி சார்.

  ReplyDelete
 6. அடப்பாவிகளா... இப்படி சொல்லியே பதிவர் சந்திப்புல, ரணகளமாகியது பத்தாதா.. இங்கேயுமா?

  பஸ்ட்டு ஒரு 3 பேருமா.. அப்புறம் ஒரு 7 பேருமா..
  அப்டின்னு வடிவேலு ரேஞ்சுக்கு கதர விட்டுடீங்களேய்யா!

  நல்லாயிருங்கடே!! (அண்ணாச்சி பொருத்தருள்வாராக!!)

  ReplyDelete
 7. இப்பொழுது வோட்டு போடா முடியா விட்டாலும் என் நெஞ்சத்தில் எப்பொழுதும் உனக்கு ஒரு இடம் உண்டு..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. //நானொரு ஊதாரி சார்./

  நம்பிட்டோம்...

  ReplyDelete
 9. //வினோத்கெளதம் said...
  இப்பொழுது வோட்டு போடா முடியா விட்டாலும் என் நெஞ்சத்தில் எப்பொழுதும் உனக்கு ஒரு இடம் உண்டு..
  வாழ்த்துக்கள்.//

  ஒரே கமெண்டில் என் நெஞ்சத்தை துளைத்தது விட்டாய் உடன்பிறப்பே..

  ReplyDelete
 10. //பழமைபேசி said...
  //நானொரு ஊதாரி சார்./

  நம்பிட்டோம்..//

  வாங்கண்ணா ரொம்ப நாளக்கப்புறம் வந்துருக்கீங்க.. வூட்டுல அல்லாரும் சவுக்கியந்தானுங்கோ?

  ReplyDelete
 11. //இதுவரை எந்த ஒரு ஓவியமும் மயங்கவில்லை, மடங்கவில்லை, மடியவுமில்லை//
  அ.மே.நி.ப வில் படிக்காம அ.ஆ.மே.நி.ப வில் படித்தாலே இப்படித்தான்.

  ReplyDelete
 12. நாகா அருமை.

  ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்ப தான் நேரம் கிடைச்சது

  வாழ்த்துகள்

  ReplyDelete
 13. //என் பக்கம் said...
  நாகா அருமை.

  ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்ப தான் நேரம் கிடைச்சது

  வாழ்த்துகள்//

  தம்பீ என் தும்பீ, உனக்கும்தான் விருது வழங்கப்பட்டிருக்கிறது, கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்து வாழ்த்திக்கொள். நீண்ட நாட்களாய் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி நாங்கள் நினைவு கொள்வது?

  ReplyDelete
 14. வருகைக்கு நன்றி சென்ஷி..

  ReplyDelete
 15. //கதிர் said...
  //இதுவரை எந்த ஒரு ஓவியமும் மயங்கவில்லை, மடங்கவில்லை, மடியவுமில்லை//
  அ.மே.நி.ப வில் படிக்காம அ.ஆ.மே.நி.ப வில் படித்தாலே இப்படித்தான்.//

  என்ன செய்வது அண்ணா, விதி நம் வழியில் நின்று கொக்கரிக்கிறது...

  ReplyDelete
 16. அன்பு நண்பா,

  உங்களால் நான் பேறு பெற்றேன். நன்றிகள் ஆயிரம்.

  பிரபாகர்.

  ReplyDelete
 17. அத்தன மக்களுக்கும் வாழ்த்துக்களை கூவிக்கிறேனுங்கோவ்

  ReplyDelete
 18. நாகா .... ஆஹா , அந்த படத்தை எங்க புச்சீங்க ...
  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 19. உன்னை நினைத்தால் பெருமையடா கண்மனி..

  //"வாழ்க அண்ணா நாமம் போடுக மக்களுக்குப் பட்டை நாமம்."
  //

  மடலை முத்தாய்ப்பா நகைப்புடன் முடித்தது அருமையடா செல்லமே :))

  ReplyDelete
 20. உங்களுக்கும்...உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 21. கொடை வள்ளலே..
  அவார்டுக்கு ரொம்ப நன்றிங்க ,ரொம்ப பெருமையா இருக்கு உங்க கிட்டேந்து அவார்டு வாங்குவது.

  ReplyDelete
 22. இரண்டாவது முறை பெற்றால் தப்பில்லை. "Interesting Blog" விருதில் உங்களை இனைத்துள்ளேன். நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 23. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரபாகர், அபு, சுந்தரராமன.

  ReplyDelete
 24. //ச.செந்தில்வேலன் said...
  உன்னை நினைத்தால் பெருமையடா கண்மனி..//

  நன்றி உடன்பிறப்பே..

  ReplyDelete
 25. வருகைக்கு நன்றி கோபி, சிதம்பரம்..

  ReplyDelete
 26. //கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
  கொடை வள்ளலே..
  அவார்டுக்கு ரொம்ப நன்றிங்க ,ரொம்ப பெருமையா இருக்கு உங்க கிட்டேந்து அவார்டு வாங்குவது.//

  இருக்காதா பின்னே? யாரிடம் விருது வாங்குகிறீர் என்று இடுகையிலுள்ள புகைப்படத்தைக் கண்டு உணர்ந்து கொண்டீரல்லவா?

  ReplyDelete
 27. //சங்கர் தியாகராஜன் said...
  இரண்டாவது முறை பெற்றால் தப்பில்லை. "Interesting Blog" விருதில் உங்களை இனைத்துள்ளேன். நிறைய எழுதுங்கள்.//  விருதுக்கு நன்றி சங்கர் சார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.

  ReplyDelete
 28. நாகா,

  என் ஆங்கிலப் பக்கத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். எனக்கு நீங்கள் யாரென்று சட்டென்று நினைவு வரவில்லை. உங்கள் இயற்பெயர் நாகா தானா?

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 30. வருகைக்கு நன்றி, விரிவாகப் பின்னூட்டமிடுகிறேன் தீபா..

  ReplyDelete
 31. வருகைக்கு நன்றி, வாலண்ணே..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆறோடும் மண்ணில்..!

நண்பர்கள் தேநீர் விடுதி

ஜெயகாந்தன், நெடுமாறன், நக்கீரன், அஜீத்குமார்